லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பாஹ் என்கிற ஹோமியோபதி டாக்டர், மலர் மருத்துவம் என்ற புதிய துறையைக் கண்டறிந்தார். முப்பது வருடங்களுக்கும் மேலாக லண்டன் காடுகளில் பூக்களோடு உறவாடிய பிறகுதான், இந்த மருத்துவ முறையை அவர் கண்டறிந்தார்.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனிச் சிறப்பு குணம் உண்டு. அது உடல்நலச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வாகப் பயன்படும் என்று அவர் ஆராய்ச்சி செய்துள்ளார். தனி மலரையோ அல்லது, பல மலர்களின் கலவையையோ சிகிச்சையாகப் பரிந்துரைத்துள்ளார்.
மனமும் உடலும்
மலர்களின் நறுமணம், நிறம், அமைப்பு போன்றவை மனிதர்களுக்குக் காலம்காலமாகப் புத்துணர்வை வழங்கிவந்துள்ளன. அத்துடன் நில்லாமல் மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் என்பதே அவருடைய கண்டறிதல். உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே. மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.
ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும். இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.
இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதேநேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.
பிரச்சினைகளுக்கு உதவி
முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க கார்ஸ், மிமுலாஸ் என்கிற மருந்துகள் உதவும். இதனால் முதுகு வலி குறையும். டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, மது, சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் மலர் மருந்துகள் உண்டு. பரு, தோல் பிரச்சினை, தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் மலர் மருந்து உண்டு.
இந்தச் சிகிச்சையைத் தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும், அனுபவமும், தீவிர ஆர்வமும், உள்ளார்ந்த பார்வையும் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரிடம் சிகிச்சை பெறும்போது மலர் மருத்துவம் தரும் பலன்களை உணரலாம்.
கட்டுரையாளர், உடல்நல ஆலோசகர்
தொடர்புக்கு: umavenkats@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago