டாக்டர் ஷஃபி
மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பு! அதிலும், சர்க்கரை நோய் கொண்டவர்களுடைய இதயம் மற்ற சாதாரண இதயத்தைவிட மும்மடங்கு பலவீனமானது.
இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம். சிறுவயதிலும் ஏற்படலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம், வயதானவருக்கும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.
இதற்கான மிக முக்கிய காரணங்கள்
# உடல்பருமன்
# உடல் உழைப்பின்மை
# நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை
# தொடர் மனச்சிதைவு நோய்
# தொடர் மருத்துவப் புறக்கணிப்பு
ஐம்பது வயதினரைத் தாக்கிக் கொண்டிருந்த இந்த மரண நோய், இன்று இருபது வயதினரைக்கூட அதிகமாகத் தாக்குகிறது. குறிப்பாக, இந்த இதயத் தமனி நோய்கள் சர்க்கரை நோயாளிகளை அதிகமாகத் தாக்குகின்றன.
இதற்குத் தீர்வு என்ன?
5 வகையான 100-களைக் கண்காணித்தலும் 3 வகையான ‘உ’களை கடைப்பிடித்து வருவதுமே இதற்கான தீர்வாகும்...
5 வகை 100...
# நம் உயரத்திலிருந்து 100ஐக் கழித்தால் வரும் எண்தான் நம் உடல் எடையாக (Body Weight) இருக்க வேண்டும்.
# நம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவு (Diabetes) Mean blood glucose)100ஐத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நம் இதய ரத்த (Coronary calcium score ) கால்சியம் ஸ்கோர் எனும் இதய நாள கால்சியம் படியும் இலக்கம் 100க்கும் கீழ் இருத்தல் அவசியம்.
# நம் கெட்ட கொழுப்பு (LDL) எண் 100ஐத் தாண்டாமல் இருக்க வேண்டும்
# நம் உடல் தயாரித்திடும் நல்ல கொழுப்பு எனும் (HDL) எண் 100 ஐ இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
மூன்று ‘உ’ கள்...
உணவு, உள்ளுணர்வு, உடல் உழைப்பு எனும் இந்த 3 ‘உ’களை முறையாகப் பாதுகாத்தால், நிச்சயமாக இதயம் பாதுகாக்கப்படும்.
1. உணவு
உடலில் குளுகோஸை அதீதமாக உயர்த்திடும் மாவுச்சத்து உணவை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிக் கடைப்பிடித்து வரும் உணவு முறையால், நீரிழிவு நோய்ப் பாதிப்பு நம்மை அண்டாது, உடல் பருமனும் கட்டுப்படுத்தப்படும், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
2. உள் உணர்வு
தொடர் மன உளைச்சல், மன இறுக்கம், மனச்சிதைவு நோய் போன்றவற்றுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், இதய நோய்க் காரணிகள் அதிகரிக்கும். ஹார்மோன் வித்தியாசங்களால் இதயப் பாதுகாப்பு குறையும், இதய நோய்களின் தாக்கம் கூடும்.
3. உடல் உழைப்பு
உடல் உழைப்பு குறைந்தால், உடலின் அனைத்து தசைகளும் தொய்வடையும் இதய தசைகளுக்கும் அதன் தமனிகளுக்கும் தேவைப்படும் ஆரோக்கிய சூழல் குறையும். இதய நோய்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து நம் உடல் வரவேற்கும் !!
25 நிமிட கார்டியோ உடற்பயிற்சியோ 45 நிமிட மிக வேக நடைப்பயிற்சியோ, ஒரு நாளைக்கு 10,000 காலடிகள் (10000 Steps) எனும் நவீன உத்தியையோ பயன்படுத்தி இதயப் பாதுகாப்பை அதிகரிக்கலாம்!
இதயம் காப்போம்
நோய் வந்து வருந்தி, திருந்தி மருந்துடன் வாழ்வதற்குப் பதிலாக, நோய் வரக் காரணமாக இருக்கும் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது நல்லது. முக்கியமாக, ஐந்து ‘100’கள், மூன்று ‘உ’களை மனத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு வாழ்வோமேயானால், இதய நோய்ப் பாதிப்பிலிருந்து நம்மையும் நம் அடுத்த தலைமுறையையும் நிச்சயமாய் பாதுகாக்க இயலும்.
நீரிழிவு நோய் நிபுணர், கட்டுரையாளர் தொடர்புக்கு: safihealthbay@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago