டாக்டர். உஷாரவி
யுகங்களைக் கடந்து சாதனைகள் பல நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், பல யுகங்களையும் கடந்து வந்ததுதான் இயற்கை முறை மருத்துவங்கள். நவீனம் என்பது பாதுகாப்பானதாகவும், பக்க விளைவுகளற்றதாகவும் அமைய வேண்டும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. பாதுகாப்புடன் பக்கவிளைவுகளின்றி நோய்களை முற்றிலும் நீக்குவதில் முன் நிற்பது இயற்கை மருத்துவம் மட்டுமே.
எனது 28 ஆண்டுக் கால இயற்கைவழி சிகிச்சை அனுபவத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடந்துள்ளன! பல்லாயிரம் நோயாளிகளைப் பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கை மருத்துவத்தால் பல மருத்துவர்கள் குணமாக்கியுள்ளார்கள்.
எல்லோரையும் வாட்டி வதைக்கும் பொதுவான பிரச்சினை என சைனட்டிஸ் தொற்றைச் சொல்லலாம். இன்றைய சூழ்நிலையில் சைனஸ் பிரச்சினைக்கு ஆட்படாதவர்களே யாரும் இல்லை எனலாம்! இதற்கு இயற்கைவழி சிகிச்சை முறையின் படி, 14 வகையான முறையில் அந்தந்த நோயாளிகளின் தன்மைக்கேற்றவாறு சிகிச்சையளிப்பதன் மூலமாக மிகச் சரியான தீர்வை வழங்கி வருகிறது சுசான்லி மருத்துவமனை.
சளி, இருமல், தும்மல், மார்புச்சளி போன்றவற்றை, பாரம்பரியமாக மிக எளிய வகையில், சமயலறையின் அஞ்சறைப் பெட்டி எனும் மிகப் பெரிய மருத்துவப் பெட்டகம் மூலமாக நமது முன்னோர்கள் தீர்வு கண்டுள்ளார்கள். அஞ்சறைப் பெட்டிகள் சரியாகப் பல சமையலறையில் பராமரிக்காததன் விளைவே பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. இயற்கைவழி சிகிச்சை முறையில் இன்றைய நவீன உத்தியுடன் பக்க விளைவோ, பின் விளைவோ இல்லாத வகையில் தீர்வளிக்கிறது.
அதே போல் இன்றைக்கு “வலி” என்னும் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் எப்போதும் முழுமையான தீர்வாகாது. மாக்ஸா, ஸ்டோஎதெரபி, அரொமொதெரபி உள்ளிட்ட 14 வகையான இயற்கை முறை சிகிச்சையின் மூலமாக எந்த ஒரு வலி பிரச்சினை என்றாலும் மிகச் சரியான தீர்வை வழங்குவதில் சுசான்லி மருத்துவமனை செயல்படுகிறது. 100க்கும் மேற்பட்ட வலிப் பிரச்சினைகளுக்கும் இயற்கைவழி முறையில் சரியான தீர்வு வழங்கப்படுகிறது. நோயின் தன்மையினை அடிவேர் வரை ஆராய்ந்து அதற்கு மிகச் சரியான சிகிச்சை முறை எது எனச் சரியாக ஆய்ந்து தீர்வளிப்பதே இம்மருத்துவமனையின் தனிச் சிறப்பு.
நாகரிகம் முன்னேற்றமான பாதையில் செல்கிறது என்றால் ஆரோக்கியம் மேம்படுகிறது எனக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்துக்கான செலவுகள் குறைய வேண்டும். ஆனால், இன்று ஆரோக்கியமும் மேம்படவில்லை, செலவும் குறையவில்லை. நோய் எதுவென்றாலும் அதற்கான தீர்வை வெகு வேகமாகவும், பக்க விளைவுகள் இல்லாத வகையிலும் குறைந்த செலவிலும் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago