தமிழக யோகப் பயிற்சி மையங்கள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி நல்வாழ்வு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மையத்தில், யோகாசன அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. காலை 6.15 மணி முதல் 7.15 மணிவரை, மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை யோகா கற்றுத்தரப்படுகிறது.

தொடர்புக்கு: நல்வாழ்வு இயற்கை மருத்துவ, யோகா மையம், எஸ்.எம்.எஸ். வணிக வளாகம், (பழைய சிட்டி யூனியன் வங்கி மாடியில்), 11, வடக்கு ரத வீதி, திருநெல்வேலி.

இமயம் யோகா பயிற்சி மையத்தில், பத்மாசனம், யோகா முத்ரா, பட்சிமோத்தாசனம் என்று பல்வேறு அடிப்படை யோகா பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. காலை 5 மணி முதல் 8.30 மணிவரை ஆண்களுக்கும், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பெண்களுக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. கட்டணம் ரூ.800-ம், சிறார்களுக்கு ரூ.500.

தொடர்புக்கு: இமயம் யோகா பயிற்சி மையம், எஸ்.கே. காம்ப்ளக்ஸ், மகாராஜ நகர் ரயில்வே கேட் அருகில், பாளையங்கோட்டை.

மதுரை

மதுரை வட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான யோகா ஆசிரியர்களை உருவாக்கிய மையம் காந்தி மியூசியம். காலை 6, 7 மணி மாலை 6, 7 மணி ஆகிய நேரங்களில் பொதுவாகவும், காலை 10.30 முதல் 11.30 வரையில் பெண்களுக்குத் தனியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவுக் கட்டணம் ரூ. 100 செலுத்தி ஆண்டு முழுவதும் யோகா கற்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்.ஏ. யோகா வகுப்புகளும், சென்னை உடற்கல்வியியல் பல்கலைக்கழக எம்.எஸ்.சி. யோகா வகுப்புகளும் இங்கேதான் நடக்கின்றன.

தொடர்புக்கு: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், தமுக்கம், மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரைக் கல்லூரியில் உள்ள யோகா ஆராய்ச்சி மையம் யோகா பயிற்சி அளித்து வருகிறது. மாதப் பயிற்சி கட்டணம் ரூ.150. பாரம்பரிய யோகா மட்டுமின்றி நடன, இசை வழி யோகாவும் இங்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. யோகக் கலையைக்கொண்டே நோய்களைக் குணமாக்கும் முயற்சிகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புக்கு: மதுரை கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம், வித்யா நகர், திருப்பரங்குன்றம் சாலை, ஆண்டாள்புரம், மதுரை

திருச்சி

திருச்சியில் உள்ள அமிர்தா யோக மந்திரம், 10 நாள் யோகா வகுப்புகளை நடத்துகிறது. பதஞ்சலி யோக சூத்திரத்தில் உள்ள 8 படிநிலைகள் கற்றுத் தரப்படுகின்றன. காலை 6 முதல் 7 மணி மற்றும் மாலை 5 முதல் 6 மணிவரை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ரூ.1,500. வீட்டிலேயே செய்யக்கூடிய சிறிய சிகிச்சை முறைகள், எளிய உடற்பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகின்றன.

முகவரி: அமிர்தா யோக மந்திரம், 14/44 பி, பிஷப் குளத் தெரு, புத்தூர், திருச்சி - 17.

கோவை

கோவையில் உள்ள வாலை மையம் சாதாரண மக்களுக்கும் யோகாவைக் கொண்டு சென்றுவருகிறது. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் அன்னதானத்துக்கு மட்டும் விருப்பமுள்ளவர்களிடம் நிதி பெறப்படுகிறது.

தொடர்புக்கு: வாலை மையம், கோவை பூ மார்க்கெட் அருகே, 40, ரங்கே கவுடர் வீதி, கோவை-1

அனைவருக்கும் யோகா சென்று சேரவேண்டும் என்பதற்காகப் பலர் கூடும் இடத்துக்குச் சென்று யோகா கற்றுத் தருகிறார் கோவைபுதூர் சத்ரபதி. கருமத்தம்பட்டியில் ஒரு வேளை யோகா கற்பிக்க ஒரு குழுவுக்கு ரூ.1,500 மட்டுமே பெற்றுவருகிறார். யுனிவர்சல் யோகா கிங்டம் என்ற இவர் யோகா கற்றுத்தருகிறார்.

தொடர்புக்கு: சத்ரபதி, யுனிவர்சல் யோகா கிங்டம், 86, கியூ பிளாக், கோவைபுதூர், கோவை-42

உதகமண்டலம்

உதகையில் ரோஜா பூங்கா அருகே விஜயநகரம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் பிராணாயாமம் முதல் அடிப்படை ஆசனங்கள்வரை பயிற்றுவிக்கப்படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் 5 மணிவரை எந்த நேரத்திலும் பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம்: ரூ.1,500. அத்துடன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

தொகுப்பு: கா.சு. வேலாயுதன், அ. அருள்தாசன், கே.கே. மகேஷ், எஸ். கல்யாணசுந்தரம், ஆர்.டி. சிவசங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்