குழந்தைகளுக்கு டான்ஸில் இருந்து, அதில் வீக்கம் இருந்தால், பனங்கற்கண்டு 1 கப், உலர்ந்த திராட்சை 1 கப், திப்பிலி 6, மிளகு 5-6, பட்டை - சின்ன துண்டு, அதிமதுரம் - சின்ன துண்டு, நெய் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டைப் பொடி செய்து, திராட்சையை அரைத்து வைத்துக்கொள்ளவும். மேலே சொன்ன மருந்துகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்யவும். வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பனங்கற் கண்டைச் சேர்த்துக் கொதி வந்ததும், திராட்சைப் பொடியைச் சேர்த்து 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். லேகியம் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். கடைசியில் தேன் சேர்க்கவும்.
தொண்டையில் வலி இருக்கும்போது, சுண்டைக்காயைவிட சிறிய உருண்டையைக் கொடுத்து வந்தால் சரியாகிவிடும்.
வீஸிங் குறைய
குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ வீஸிங் - மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், குங்குமப் பூவை பாலில் 2 இதழ் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் குறையும்.
பருமன் குறைய
உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் இளைக்க இளஞ்சூடான நீரில் 1 மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து 1 ஸ்பூன் தேன் அல்லது 1 சிட்டிகை உப்பைச் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் இளைக்கும்.
நெஞ்செரிச்சல்
அசிடிட்டியை தடுக்க, சாப்பிட்டவுடன் சுடுதண்ணீரில் 1 சின்ன வெல்லக் கட்டியை பொடி செய்து போட்டுக் குடித்து வந்தால், நெஞ்செரிச்சலும் அசிடிட்டியும் வராமல் தடுக்கும்.
கல்லீரல் பிரச்சினைக்கு
பப்பாளிக்காயை கூட்டு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரலுக்கு நல்லது. வாரம் ஒரு முறை 10 நாளைக்கு ஒரு முறை இப்படிச் சாப்பிடவும். வெந்தயக் கீரையில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டாலும் கல்லீரலுக்கு நல்லது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago