ஆஸ்துமாவுக்கு ஆகாதவர்கள் யார்?

By டி. கார்த்திக்

குளிர் காலத்திலும் மழைக் காலத்திலும் கடுமையைக் காட்டும் ஆஸ்துமா, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகள் சுருங்குவதாலும், மூச்சுக்குழலில் உள்ள உள்சவ்வு வீங்குவதாலும் மூச்சு செல்லும் பாதை சுருங்கக்கூடும். அந்தச் சவ்விலிருந்து நீர் சுரப்பதால் மூச்சுப் பாதை மேலும் அடைபட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அதுதான் ஆஸ்துமா.

எப்படி வரும்?

ஒருவருக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை இருக்கிறதென்றால், அந்த ஒவ்வாமை தொடர்ந்து தூண்டப்படும்போது ஆஸ்துமா வந்துவிடலாம். உணவு, தூசி, புகை, தொழிற்சாலை மாசுபாடு, மருந்துகள் என ஒவ்வாமையைத் தூண்டும் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது.

கட்டுப்படுத்துதல்

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், புழங்கக்கூடிய இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தூசு, குப்பை, அழுகிய உணவுப் பொருட்கள் போன்றவை அருகே இருக்கக்கூடாது. வீட்டில் ஒட்டடை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அழுக்கான உடைகள், படுக்கைகள், தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது. அழுக்குகளில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.

குளிரூட்டப் பட்ட அறை களைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான காற்றும் ஆகாது. சுழல் விசிறிக்கு மிக அருகே படுக்கக் கூடாது.

வாசனை திரவியங்கள், ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணி புகை, கற்பூரம், அடுப்பு புகை ஆகியவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரிகள்.

ஆஸ்துமா உள்ளவர்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றின் ரோமம், துர்நாற்றம், கழிவு ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.

செய்யக் கூடாதது

ஆஸ்துமா நோயாளிகள் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். புகைபிடிப்பவர்கள் அருகேயும் இருக்கக் கூடாது.

வீட்டைச் சுத்தப்படுத்துதல், ஒட்டடை அடித்தல், கழிவறைகளில் ஆசிட் பயன்படுத்துதல், வண்ணம் பூசுதல், அதிக நறுமணப் பூக்கள் அருகே புழங்குவது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வெளியில் வாகனங்களில் செல்லும்போது முகமூடி அணிய வேண்டும்.

சில தொழிற்சாலைகளும்கூட ஆஸ்துமாவுக்குக் காரண மாகின்றன. ரசாயனத் தொழிற்சாலைகள், பஞ்சு மில், அரிசி மில், மாவு மில், சிமெண்ட் தொழிற்சாலை, நூற்பாலைக் கழிவுகளில் இருந்து வெளிப்படும் புகையும் தூசும் ஆஸ்துமாவுக்கு ஆகாது. இந்த இடங்களில் பணிபுரிவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

தயிர், சர்பத், ரோஸ் மில்க், லஸ்ஸி, குளிர்பானங்கள், குளிர்ந்த தண்ணீர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இளஞ்சூடான தண்ணீரைப் பருகுவது மிகவும் நல்லது.

ஏற்ற உணவு

சில உணவுப் பொருட்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது என மருத்துவ ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, சிவப்பு மிளகு ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆப்பிளும்கூட ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறுகின்றன ஆய்வுகள்.

தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. பலூனை ஊதிப் பார்க்கலாம். காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊத முயற்சிக்கலாம். சிறுவர்கள் ஊதி விளையாடும் சோப்புக் குமிழ் ஊதுகுழலைக்கூட இதற்குப் பயன்படுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்