(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஆட்டிசம் உள்ளவர்களுக்கு...
* தொடுதல் என்பதே வலி உண்டாக்குவதாக அமையலாம். இத்தகையோர் தங்களை அடுத்தவர் தொடுவதையே விரும்ப மாட்டார்கள்.
* பல் துலக்குவதிலும் தலைக்குக் குளிப்பதிலும் விருப்பமின்மை. கூந்தலை சீவிக்கொள்வதும் பிடித்தமில்லாமல் போகும்.
* கழிவறை செல்வதை பயிற்றுவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
* தங்கள் உடலின் சரியான அளவுகளை இவர்களால் அனுமானிக்க முடியாது. எனவே, எவ்வளவு தூரம் தள்ளி நின்றால் அடுத்தவர் மேல் உரசாமல் நிற்க முடியும் என்பது போன்ற விஷயங்களை கணக்கிட முடியாது.
சின்னச் சின்ன நுட்பமான வேலைகளைச் (fine motor skills) செய்வதில் சிக்கல் ஏற்படும். ஷூ லேஸ்களை கட்டுவது, பட்டன் போடுவது போன்ற செயல்களைக் கற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும்.
உடல் சார்ந்த தன்னுணர்வுச் சிக்கல்களுக்கு:
ஒரு மூலையில் உட்காருவதற்கு பதில் அறையின் மையத்தில் உள்ள நாற்காலியில் உட்காரச் செய்யலாம். எப்போதும் ஒருவரிடமிருந்து ஒரு கை அளவு இடைவெளியில் நின்றே பேச வேண்டுமென்று பழக்கலாம். எனவே கையை நீட்டி, இடிக்காத தூரத்தில் நின்று உரையாடப் பழகுவர். சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்துக்கும் ஜீரணக் கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆராய்ந்து வருகிறார்கள். குளூட்டன் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரதங்களை ஜீரணிக்க இவர்களுடைய குடல் சிரமப்படும். புரதம் ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலந்துவிடுவதால், அது மூளையை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம்.
குளூட்டன் என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரதம். பாலுக்கு மாற்றாக சோயா பால், முளை கட்டிய தானியங்களைக் கொண்டு செய்த சுண்டல், சர்க்கரையில் இருக்கும் குளுகோஸின் அளவு இக்குழந்தைகளை மேலும் தூண்டிவிடும் என்பதால், கருப்பட்டி சேர்த்த சத்துமாவுக் கஞ்சி என மாற்று ஏற்பாடுகளின் மூலம் இக்குழந்தைகளின் சுவையையும் அதேநேரம் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ள முடியும்.
வேதிப்பொருட்கள் - ஒவ்வாமை
வீட்டுக்கு வண்ணமடிக்கப் பயன்படும் பெயிண்ட், துப்புரவுக்குப் பயன்படுத்தும் திரவங்கள் (பாத்திரம் தேய்க்க, வீடு துடைக்க பயன்படுத்துபவை), அலுமினியம் போன்ற சில வகை கன உலோகங்கள், நொதித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் போன்ற பொருட்கள் இக்குழந்தைகள் புழங்குமிடத்தில் இருந்தாலே, இக்குழந்தைகளுக்கு அவை ஒவ்வாமையை உருவாக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆட்டிசம் - சிகிச்சை முறைகள்
ஆட்டிசத்துக்கு நான்கு வகையான சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன:
1. நடத்தைமுறை சீராக்கும் பயிற்சிகள் - Behavioral therapies
2. வளர்ச்சிக்கான பயிற்சிகள் - Developmental therapies
3. கல்வி மேம்பாட்டுப் பயிற்சிகள் - Educational therapies
4. பேச்சுப் பயிற்சி - Speech therapy.
கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள்:
சாதாரண வகுப்பறைச் சூழலில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கக்கூடிய நிலையை இவர்கள் எட்டும் காலம்வரை சிறப்புக் கல்வி (Special education) முறையையே தொடர வேண்டியிருக்கும். மாண்டிசோரி கல்வி முறை போன்று, செயல் வழி கற்பிக்கும் முறையே இவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். மேலும் சிறப்புக் கல்வி என்பதைத் தனியாக அளித்தாலும் கூட வழக்கமான பள்ளிக்கு சாதாரண குழந்தை களுடன் அனுப்புவதும் மிகவும் முக்கியம்.
பேச்சுப் பயிற்சி:
ஆட்டிசக் குழந்தைகளில் சிலர் பேச்சுக்கான தூண்டல்களே (Speech stimuli) இல்லாது இருப்பர். அத்தகைய குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சியாளரைக் (Speech-language pathologists) கொண்டு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும்.
முதலில் குழந்தைக்கு மிகவும் பிடித்த பொருட்களின் படங்களை எடுத்துக்கொண்டு பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனக்கு மிகவும் பிடித்த கார் பொம்மையின் படம் கொண்ட அட்டையை கொண்டுவந்து தந்தால், அந்த பொம்மையை குழந்தைக்குத் திரும்ப விளையாடக் கொடுப்பது என்று முதலில் பழக்கலாம். எனவே, நமக்கு வேண்டிய பொருளின் படம் கொண்ட அட்டையை எடுத்துத் தந்தால், நமக்கு அந்தப் பொருள் கிடைக்கும் என்ற புரிதலை குழந்தையிடம் கொண்டு வருகிறோம். பிறகு ஒவ்வொரு பொருளாக இப்படிக் கேட்க வைக்கலாம்.
இக்குறைபாடு உள்ளவர்களுக்கு இசை, நடனம், யோகா போன்ற பயிற்சிகள் கவனக் குவிப்பை அதிகரிக்கவும், ஹைப்பர் ஆக்டி விட்டியை (பரபரப்பு மனநிலை) குறைக்கவும் பயன்படுகின்றன.
அவசியத்தேவை செயல்பாடு
தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்த உடனே பெற்றோருக்கு மலைப்பும் ஒருவித வெறுமையும் வருவது இயற்கை. அப்படியே இருந்தால் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரமுடியாது. பெற்றோர் தங்களையே தேற்றிக் கொள்ள வேண்டியதுடன், முழுமூச்சுடன் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
இக்கேள்விக்கான பதில் அடுத்த வாரம் நிறைவடையும்
பேராசிரியர் டெம்பிளின் நம்பிக்கை
டெம்பிள் கிராண்டின் (Temple Grandin), பாஸ்டனில் பிறந்து தற்போது கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் எழுத்தாளரும்கூட. 1949-ல் பிறந்தார். இரண்டாவது வயதில் இவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோரின் தொடர்ச்சியான கவனிப்பும் சிறந்த ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைத்ததால், தனது நான்காம் வயதில் பேசத் தொடங்கினார். விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 2010-ம் ஆண்டு `டைம்ஸ்’ பத்திரிகையால் சிறந்த நூறு மனிதர்கள் வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஹிட்லர், தாமஸ் ஜெஃபர்சன், மைக்கேல் ஏஞ்சலோ, சீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் ஆர்வெல் போன்ற பலரது வாழ்கைப் பதிவுகளைக் கொண்டு அவர்களுக்கு ஆட்டிசம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதப்படுகிறது. எனவே, வாழ்க்கையில் நாம் எட்ட நினைப்பதை அடைவதற்கு ஆட்டிசம் தடையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago