கோடைகாலத்தில் உடல் உபாதைகள், சரும நோய்களை தடுக்க சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடு வதை தவிர்க்க வேண்டும் என அரசு டாக்டர் கே.மனோகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவநிலை மாற் றத்தால், வழக்கமாக பெய்யும் பருவ மழையும் சரியாக பெய்யவில்லை. இதனால், கோடைக்காலம் தொடங்கு வதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் சரும நோய்கள் மற்றொரு புறம் பாடுபடுத்த தொடங்கிவிடுகிறது.
சரும நோய்கள்:
இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சருமநோய் துறை தலைவர் கே.மனோகரன் கூறியதாவது: வெயிலில் வெளியே சென்றால், உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் வியர்வையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு, கட்டிகள், அரிப்பு, அழுக்கு தேமல் போன்றவைகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது தாக்கினால், தோல்கள் கருப்பாக மாறிவிடும்.
வெயிலால் ஏற்படும் பாதிப்பு கள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகளை அதிகமாக குடிக்க வேண்டும். உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம். முடிந்தவரை மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. இதனால், வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்க முடியும்.
குழந்தைகள் பாதுகாப்பு:
கோடைக் காலத்தில் பெரியவர்களைவிட, குழந்தை களே அதிகமாக பாதிக்கப்படுகின் றனர். எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது துணியால் மூடி அழைத்து செல்ல வேண்டும். இதனால், சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். அதே போல வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago