ம
னித உடல் இயங்குவதில் நரம்புகள், ஜவ்வு, முதுகுத் தண்டு ஆகிய மூன்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஜவ்வு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை முதுகு வலியை உண்டாக்கும். பொதுவாக வயதாவதன் காரணமாக, இயற்கையாகவே முதுகு வலி ஏற்படக்கூடும். அதைத் தவிர, எதிர்பாராமல் நடக்கும் விபத்து, அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களைக் குனிந்து தூக்குவது, அதிக தொலைவுக்குப் பயணிப்பது, பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற காரணங்களால் முதுகுப் பகுதியில் உள்ள 33 எலும்புகளிலுள்ள , ‘டிஸ்க்’ என்ற தட்டு பாதிக்கப்படுகிறது.
அந்த அமைப்பு சேதமடைந்து வீங்கிப் போய், அதன் இருப்பிடத்தைவிட்டு வெளியே வந்துவிடும். இதையே, ‘டிஸ்க் பல்ஜ்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தக் காலப் பெண்களைக் காட்டிலும் இந்தக் காலப் பெண்களுக்கே இந்தப் பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது.
இதற்குக் காரணம் என்ன? நம் முன்னோர்கள் குனிந்து நிமிர்ந்து நிறைய வேலை செய்தார்கள். ஆனால், இப்போது நம் வேலைகளைச் சுலபமாக்க மின்சாதனங்கள் வந்துவிட்டன. எனவே, தற்காலத்தில் பெரும்பாலோர் உடல் உழைப்பில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.
இடத்துக்கு ஏற்ற வலி
முதுகுத் தண்டில் எந்த இடத்தில் பிரச்சினை இருக்கிறதோ, அதற்கேற்றபடி உடலில் வலி தோன்றும். சிலருக்கு முதுகுத் தண்டின் மேல் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால், கழுத்து, தோள்பட்டை, கைகள் ஆகியவற்றிலும், முதுகுத் தண்டின் மையப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் நடுமுதுகு, அடி வயிறு ஆகியவற்றிலும், முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கீழ் முதுகு, இடுப்பு, கால்கள், பாதங்கள் ஆகியவற்றிலும் வலி ஏற்படும்.
அவந்திகாவுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைதான். ‘டிஸ்க் பல்ஜ்’ பிரச்சினையால் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றித் தற்போது குணமடைந்திருக்கிறார். இந்தப் பிரச்சினை குறித்து அவரின் அனுபவத்தைக் கேட்டதிலிருந்து…
இப்படித்தான் கையாண்டேன்
“நாலு வருஷத்துக்கு முன்னாடி, நான் 10-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ நடந்த ஒரு விபத்துல, இருசக்கர வாகனத்திலிருந்து கீழ விழுந்துட்டேன். அப்போ இரண்டு நாட்களுக்கு முதுகுவலி இருந்துச்சு. அதுக்கு அப்பறம் சரி ஆகிடுச்சின்னு நம்பி நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. ஆறு மாசம் கழிச்சு, என்னால குனிஞ்சு நிமிர முடியாமப் போயிடுச்சு.
அப்படியே குனிஞ்சாலும், முதுகுத் தண்டு ரொம்ப வலிக்கும். என்னோட ஸ்கூல் பையைக்கூடத் தூக்க முடியாமப் போயிடுச்சு. டாக்டர்கிட்ட போய் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தப்போ டிஸ்க் பல்ஜ் ஆகியிருப்பதைக் கண்டுபிடிச்சாங்க.
ஆங்கில மருத்துவத்தில் இதைச் சுலபமாகக் குணப்படுத்திடலாம்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஆனால், நான் சித்த மருத்துவ முறையைப் பின்பற்றினேன். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம் வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இப்பவரைக்கும் மருந்து எடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். வலி குறைஞ்சிருந்தாலும், ரொம்ப வேகமா படிகளில் ஏறமுடியாது. அதே மாதிரி குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது ரொம்ப கவனமாகவே இருக்கணும். மூளையைப் போல முதுகுத்தண்டும் நம் உடலுக்கு அடிப்படை என்பதால், ரொம்ப ஜாக்கிரதையாகவே இருக்கேன்.” என்கிறார்
- கனிமொழி. ஜி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago