ச
மீபத்தில் ஒரு பெண் தன் ஆறு வயதுப் பெண் குழந்தையைக் கண் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்தக் குழந்தையைப் பரிசோதனை செய்தபோது அதன் இரண்டு கண்களில் ஒரு கண் மாறுகண்ணுடனும் அந்தக் கண்ணில் பார்வைக் குறைபாடு இருப்பதும் தெரியவந்தது.
அந்தக் குழந்தைக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்து சரியான பார்வையைக் கொடுக்க முடியும் என்றும், இல்லை என்றால் ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்படும் எனவும் கண் மருத்துவர் அறிவுறுத்தினார்.
குடும்ப ராசி?
உடனே அந்தப் பெண் தனக்கும், தன் அம்மாவுக்கும் இதுபோல மாறுகண் இருப்பதாகவும், தங்களுக்குக் கண் பார்வை நன்றாக உள்ளதாகவும், இது எங்கள் குடும்ப ராசி என்றும், தன் குழந்தைக்கு அறுவைசிகிச்சை வேண்டாம் என்றும் கூறி கண் மருத்துவரின் ஆலோசனையை மறுத்தார்.
உடனே மாறுகண் உள்ள அந்தப் பெண்ணைக் கண் மருத்துவர் உட்காரவைத்து அவருடைய நல்ல கண்ணை மூடிக்கொண்டு மாறுகண் மூலமாகப் பார்க்கச் செய்தார். தனது மாறுகண் பார்வை மிக மோசமாக இருப்பதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ந்துபோனார். அவ்வளவு காலம் அவருடைய நல்ல கண் மூலமாகவே பார்வை கிடைத்து வந்திருக்கிறது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு மாறுகண்ணால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அந்தப் பெண் நம்பியுள்ளார்.
இதுவரை கண் பரிசோதனைக்கே செல்லாத அந்தத் தாயின் பார்வைக் குறைபாட்டையும் அந்தக் குழந்தையின் பார்வைக் குறைபாட்டையும் அறுவைசிகிச்சை மூலம் சரி செய்வதற்கான சாத்தியம் இருக்கிறதா?
சேய்க்கு முடியும்... தாய்க்கு முடியாது.
ஏன் முடியாது?
இருவருக்கும் உள்ள பிரச்சினை ஒன்றுதான். அதாவது மாறுகண், சோம்பல் கண் நோய்.
அந்தக் குழந்தைக்கு முறையான அறுவைசிகிச்சை , தொடர்சிகிச்சை ஆகியவை மூலம் முழுப் பார்வையையும் மீட்டெடுக்க முடியும்.
ஆனால், அந்தத் தாய்க்குத் தற்போது எந்த சிகிச்சையை அளித்தாலும் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய முடியாது. ஏன்?
மூளை நடத்தும் போராட்டம்
ஒரு குழந்தை பிறந்து எட்டு வருடங்கள்வரை மூளை, அதன் நரம்புகள் 80 சதவீத வளர்ச்சி அடையும். இந்த நேரத்தில்தான் கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பியல் இணைப்பு அதிவேகமாக வளர்ச்சி அடையும்.
அப்போது மாறுகண்ணுடன் வளரும் குழந்தை நல்ல கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். மாறுகண் மூலம் பார்வை வித்தியாசமாகவும் மங்கலாகவும் தெரியும். இந்த இரு கண் பார்வை மூளையை அடையும்போது, அந்த இரண்டு பிம்பங்களையும் இணைப்பதற்கு மூளை பெரிய போராட்டத்தையே நடத்தும். இந்தத் தொடர் போராட்டத்தில் சோர்ந்துபோன மூளை நல்ல கண்ணின் பார்வையை மட்டும் எடுத்துக்கொண்டு, மாறுகண் மூலமாக அனுப்பப்படும் பார்வையை நாளடைவில் புறக்கணித்துவிடும். பின்னர், அந்த மாறுகண் சோம்பலாகிவிடும்.
மீட்டெடுப்பதற்கான சாத்தியம்
இந்தச் சோம்பல் கண்ணை முறையான தொடர்சிகிச்சை மூலம் எட்டு வயதுக்கு முன்னரே (இரண்டு வயதுக்குள் சரிசெய்வது மிகச் சிறந்தது) நல்ல பார்வை தரும் கண்ணாக மாற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதற்குப் பின்னால் கண்டுபிடித்தால் பதினைந்து வயதுவரை 75 சதவீதப் பார்வையை மீட்டெடுக்கலாம். பதினைந்து வயதுக்கு மேல் மாறுகண்ணால் ஏற்படும் பார்வையிழப்பைச் சரி செய்வது மிகக் கடினம்.
இதைக் கேட்டவுடன் அந்தப் பெண் தன் குழந்தையை உடனே அழைத்துச் சென்று அறுவைசிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாமல், தற்போது இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார். வரவேற்கப்பட வேண்டிய மாற்றம் இது. எனவே, குழந்தைக்கு மாறுகண் இருந்தால் உடனடி சிகிச்சைக்கு நடவடிக்கை எடுங்கள்.
கட்டுரையாளர், கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago