உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. (பவன – வாயு, முக்தி – விடுதலை).
செய்முறை
# மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும்.
# உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம்.
# கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.
# தூக்கிய காலை மடித்து அடிவயிறு, வயிறு ஆகியவற்றின் மேல் படியும்படி வையுங்கள்.
# மடித்த கால்களைக் கட்டிக்கொள்ளுங்கள்.
# தொடைகள் இரண்டும் வயிற்றுப் பகுதியை நன்கு அழுத்தியிருக்க வேண்டும்.
# தலையைத் தூக்கி முழங்காலில் தாடை படும்படி வைக்க வேண்டும்.
# மூச்சு சீராக இருத்தல் நலம். மூச்சைப் பிடித்துக்கொண்டிருப்பதைத் தவிருங்கள்.
தவிர்க்க:
# கழுத்துக்கு சிரமம் ஏற்படக் கூடாது.
# இடுப்பு அல்லது முழங்கால் வலிக்கும் அளவுக்கு அழுத்துவதைத் தவிருங்கள்.
படிப்படியாக
# தொடைகளை வயிற்றோடு சேர்த்து வைக்க முடியாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். ஒரு சில நாட்களில் வசப்படும். இல்லாவிட்டாலும் முடிந்தவரை அழுத்தினால் போதும்.
# இதே நிலையில் உடலை ஆசுவாசப்படுத்த முடிந்தால் நல்லது.
# ஆசனத்திலிருந்து வெளியேறும் விதம்
# முதலில் கழுத்தை மெதுவாகக் கீழே வைக்க வேண்டும்.
# பிறகு கைகளை விடுவியுங்கள்.
# மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே கால்களை மெதுவாக மேலே உயர்த்துங்கள். முடிந்தால் 90 டிகிரி. அல்லது முடிந்த அளவு.
# மூச்சை வெளியில் விட்டபடி கால்களை மெதுவாகக் கீழே இறக்குங்கள்.
பலன்கள்
# அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்பகுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும்.
# கழுத்துக்குப் பயிற்சி கிடைக்கும்.
# அடிவயிறு அழுத்தப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உள் உறுப்புகளுக்கு நல்லது.
# பெருங்குடலில் தேங்கியிருக்கும் வாயுவை வெளியேற்றும்.
# ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் குறையும் / நீங்கும்.
# முதுகின் அடிப்புறத் தசைகளுக்கு வலு சேரும். முதுகெலும்புக்கும் தண்டுவடத்துக்கும் ஆசுவாசம் கிடைக்கும்.
# பிள்ளைப்பேறுக்கான வாய்ப்பு, செயல் திறன் கூடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago