மருத்துவமனைகளுக்கான அங்கீகாரம்: சென்னையில் இரண்டு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

By செய்திப்பிரிவு

மருத்துவமனைகளுக்கான அங்கீகாரம் தொடர்பாக சென்னையில் இரண்டு நாள் சிறப்புக் கருத்தரங்கை, 'தி சங்கர நேத்ராலயா அகாடெமி' ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி:

இந்தியா ஒரு மருத்துவ சுற்றுலாத் தலமாக பல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் இந்தியாவிற்கு வந்து சிகிச்சைபெறுகின்றனர். இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவின் சுகாதாரத்துறை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும், அதன் சேவையின் தரமும் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

சுகாதாரத் துறை மற்றும் அதன் சார்பு துறைகளில் பணியாற்றுபவர்களின் அறிவுபூர்வமான தேவைகளை பூர்த்தி செய்வதும் அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் மருத்துவமனைகளின் அங்கீகாரத்திற்கான கருதுகோள்கள், விதிமுறைகள், மேம்படுத்தப்படவேண்டிய பணிகள் முதலியவை பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை, சங்கர நேத்ராலயாவின் இணை அமைப்பான 'தி சங்கர நேத்ராலயா அகாடெமி' 'மருத்துவமனைகளுக்கான அங்கீகாரம்' (Accreditation for Hospitals) என்னும் இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதி இக்கருத்தரங்கு சென்னையில் நடைபெறுகிறது.

குறிப்பாக தரம் என்பதற்கான கருதுகோள், சுகாதாரச் சேவையின் கட்டமைப்பு, பணி அடுக்கு முறைகள் (Workflow processes), மருத்துவம் மற்றும் மருத்து சார்புத்துரைகளின் நடைமுறை செயல்பாடுகள், தர மேம்பாடு போன்ற ஒவ்வொன்றிலும் அங்கீகாரத்திற்கான கருதுகோள் குறிப்பாக 'மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அமைப்பு ' (National Accreditation Board for Hospitals and Health Care Services Organisations ) மற்றும் பன்னாட்டு தர நிர்ணய அமைப்புகளின் கருதுகோள்கள் எவ்வாறு அமைந்திருக்கிறது, அதனை அடைய எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதற்காகவும், தொடர்ச்சியான மேம்பாட்டிற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காகவும் இந்த கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் நிர்வாக அதிகாரிகள், மேலாளர்கள், மருத்துவர்கள்,சுகாதாரத்துறையில் பணியாற்றும் சார்பு அலுவலர்கள், சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள்,வழக்கறிஞர்கள், நர்சிங் துறை மாணவர்கள், நர்சிங் சூப்பிரெண்டெண்ட்கள், நர்சிங் பணியாளர்கள், மருத்துவ மேலாண்மைத்துறை மாணவர்கள், என பலருக்கும் இந்த கருத்தரங்கு பயன்படும். மருத்துவமனைகளின் அங்கீகாரம் குறித்த விழிப்புணர்வினை மேம்படுத்தவும், அங்கீகாரம் பெற வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், அவர்களுக்கு சுகாதார சேவையின் மேம்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முன் பதிவு மற்றும் அதிக விவரங்களுக்கு 044 4908 6000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். இணையத்தள முகவரி : www.thesnacademy.ac.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்