ராஜ்மா என்ற பெயரில் நாம் அறிந்த உணவுப் பண்டம், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் ஒரு வகை பிரட்டல். மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்தப் பிரட்டலின் பெயரே, அந்தப் பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது. இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்தப் பிரட்டலின் பெயரிலேயே, சுவை மிகுந்த அந்தப் பயறு விதையும் அழைக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் அதிகப் புழக்கத்தில் இல்லாத பயறு வகை இது. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப் பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் கிட்னி பீன்ஸ் எனப்படுகிறது. வடஇந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்தப் பயறு வகையும் பிரபலமாகியுள்ளது.
பயன்பாடு
பெரிதான இந்தப் பயறு விதையை, மிக நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லையென்றால் வேகாது. இந்தப் பயற்றின் தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேக வைக்கும்போது இது வெளியேறி விடும்.
சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தனியாகச் சாப்பிடுவதைவிட, மற்றத் தானிய உணவு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது ராஜ்மாவில் உள்ள புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும்.
ஊட்டச்சத்து
ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம்.
இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது. மலத்தின் அளவையும் பெருக்கும்.
கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும்.
ஆங்கிலத்தில்: Kidney Beans
தாவரவியல் பெயர்: Phaseolus vulgaris
கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும்.
இதிலுள்ள அதிகப் புரதம், ரத்தசர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதன்மூலம் உடலின் ரத்தசர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம்.
இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிகச் சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும்.
இதைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இதயத்தை வலுப்படுத்தும். இதிலுள்ள ஃபோலேட், இதய நோய்களுக்கு ஒரு காரணியான ‘Homocysteine’ அளவை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஃபோலேட் சத்து கர்ப்பிணிகளுக்கும் உகந்தது.
குடல் பகுதிகளில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, குடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.
அத்தியாவசிய வைட்டமின் சத்துகள் இதில் அதிகம். இந்த வைட்டமின்கள், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்து வதாக நம்பப்படுகிறது.
இதில் எதிர்-ஆக்ஸிகரணப் பொருள் (ஆன்டி ஆக்சிடண்ட்) அதிகம்.
தெரியுமா?
மற்றப் பயறு, பட்டாணி வகைகளைப் போல் ராஜ்மாவை முளைகட்டிப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், இது ஊறுவதற்கே நீண்ட நேரம் பிடிக்கும்.
ராஜ்மா ஆங்கிலத்தில்: Kidney Beans
தாவரவியல் பெயர்: Phaseolus vulgaris
மைசூருக்கும் பருப்புக்கும் என்ன சம்பந்தம்?
மைசூர் பருப்பு, மைசூர் பருப்பு என்று சொல்லக் கேட்டிருப்போம். மைசூருக்கும் இந்தப் பருப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தியில் மசூர் தால் எனப்படும் பருப்பு, தமிழகம் வந்தபோது மைசூர் பருப்பாகிவிட்டது.
துவரம் பருப்பைப் போன்ற தோற்றத்துடன், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் பருப்பு இது. தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற போதிலும், கொஞ்சம் கொஞ்சமாக இது அறிமுகமாகிவருகிறது. இந்தப் பருப்பு எகிப்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கி.மு. 11,000 ஆண்டிலிருந்து கிரேக்கர்கள் மசூர் பருப்பைப் பயிரிட்டுவந்ததாக நம்பப்படுகிறது.
பயன்பாடு
சோறு, சப்பாத்தியுடன் சேர்த்தோ அல்லது சூப்பின் சுவை, மணத்தைக் கூட்டவோ இந்தப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. வடஇந்தியாவில் கிச்சடி தயாரிப்பில் அரிசியுடன் இந்தப் பருப்பும் சேர்க்கப்படுகிறது. இதை நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டியதில்லை, விரைவாக வெந்துவிடும்.
ஊட்டச்சத்து
இதில் புரதம் அதிகமென்பதால், விலங்கு புரதத்துக்குச் சிறந்த மாற்று. முளைகட்டிப் பயன்படுத்தினால் புரதக் கூறின் முழு பயன்களையும் பெறலாம்.
அதிக நார்ச்சத்து உண்டு. உடலில் சேர்ந்த கெட்ட கொழுப்பை நீக்க இது உதவும்.
இது சிறந்த ஆன்டி ஆக்சிடண்டும்கூட.
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்தைத் தருவதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலின் ஆற்றலை எளிதில் மீட்டெடுக்க உதவும்.
உணவு எதிர்க்களிக்கும் தொந்தரவுகளுக்கு இந்தப் பருப்பு தீர்வு தரும். இதைக்கொண்டு பித்த நீர்சுரப்பை முறைப்படுத்துவது பற்றி சில ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பருப்பை மசித்து முகப்பூச் சாகப் பயன்படுத்தினால் தோலில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு முகம் புத்துணர்வு பெறும். தோலின் மேற்பகுதியை மென்மையாக்க உதவுகிறது.
இது தோல் நோய்களைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெரியுமா?
மசூர் பருப்பை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு கனடா.
மசூர் பருப்பு ஆங்கிலத்தில்: Red Lentil / Masoor Dal
தாவரவியல் பெயர்: Lens culinaris
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago