பயனற்றுப்போனது எச்.ஐ.வி. நோயாளிகள் பயண அட்டை!

By ஆர்.கிருபாகரன்

எச்.ஐ.வி நோய் பாதித்தவர்களுக்கு பல மாநிலங்களில் பேருந்துப் பயண அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது தமிழகத்திலும் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான நோயாளிகளின் பயன்பாட்டிற்கென தொடங்கப்பட்ட இத் திட்டம், தற்போது எத்தனை பேருக்கு பயன்படுகிறது என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

தமிழகத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 32 மாவட்டங்களில் உள்ள 41 அரசு கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களில் ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்தை பெற்று வருகின்றனர். மாதத்தில் இரண்டு முறை நேரில் சென்று சிகிச்சை பெற்று வரவேண்டிய தேவையும் இவர்களுக்கு உள்ளது.

பயன்படுத்துவோர் 2% பேர்

இந் நிலையில் 2010, டிசம்பரில் இலவச பேருந்து பயண அட்டைகளை அவர்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அரசின் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களுக்குச் செல்லவும், மருந்துகள் வாங்கவும் மாதத்திற்கு 4 முறை பயணம் செய்துகொள்ளும்வகையில் ரூ.1.76 கோடி செலவில் இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், 48 ஆயிரத்து 300 பேர் பயனடைவர் என்றும் அரசு தெரிவித்தது. நோயாளிகள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையில், வெறும் 2 சதவீதம் பேரே இந்த அட்டையை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிப்படையாகத் தெரியும்

எச்.ஐ.வி நோய் சிகிச்சை பெறுபவர்கள் கூறுகையில், அட்டை வைத்துள்ள யாருமே இதை பயன்படுத்துவதில்லை. காரணம் இந்த அட்டையில் பயனாளியின் புகைப்படத்துடன் பெயர், வயது / பாலினம், கூட்டு மருத்துவ சிகிச்சை எண், மையத்தின் பெயர் ஆகிய விபரங்களுடன், தமிழக அரசின் இலச்சினையும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக இலச்சினையும் உள்ளது.

எங்களது விவரத்துடன், நாங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என வெளிப்படையாக கூறும்படியாக இது உள்ளது.

நடவடிக்கை இல்லை

பொதுஇடங்களில் எச்.ஐ.வி பாதித்த வர்கள் என்றாலே, பொதுமக்களின் பார்வை வேறு மாதிரியாக உள்ளதால் நாங்கள் இதை பயன்படுத்துவதில்லை. இது தொடர்பாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இலச்சினை இல்லாமல் அடையாள அட்டை வழங்க அரசிடம் துறைரீதியாக மனுக்கள் கொடுக் கப்பட்டுள்ளதாகத் தெரியவரு கிறது. ஆனால், இதுவரை எந்த நட வடிக்கையும் இல்லை என்றனர்.

நலத்திட்டங்கள் பலவும், பயன் படாமல் போவதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம்.

கோடிக்கணக்கில் செலவழித்து, ஏழை, எளியவர்களுக்கு அறிவிக்கப் படும் திட்டங்களில் சிறு குறை இருந்தாலும், பாலில் கலந்த நஞ்சு போல அனைத்துமே வீண்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்