மர்ஜரியாசனம் - விலங்குகளைப் போல நிற்கும் ஆசனம்

By யோகன்

நாலு கால் உயிரினங்களைப் போன்ற நிலையில் நிற்கும் ஆசனம் இது. முதுகு, இடுப்பு வலியைப் போக்க மிகவும் பயனுள்ள ஆசனம்.

செய்முறை

# முதலில் முழங்கால்களை ஊன்றிப் பிறகு கைகளை முன்னே கொண்டுசெல்லவும்.

# முழங்காலில் உடலைத் தாங்க முடியாதவர்கள் சாதாரணமாக அமர்ந்த நிலையிலிருந்து கைகளை முன்னே நீட்டிக் கைகளை ஊன்றிக்கொள்ளலாம். பிறகு முழங்காலை மடித்துக் கால்களை நீட்டி உடலை மேலே தூக்கலாம்.

# குப்புறப் படுத்த நிலையிலிருந்தும் இந்த நிலைக்கு வரலாம்.

# முழங்கால்கள் இடுப்புக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் தோள்பட்டைகளுக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.

ஆசனப் பயிற்சி

# மூச்சை ஆழமாக உள்ளே இழுங்கள். இழுக்கும்போது தலை மேல் நோக்கி உயரட்டும். இப்போது முதுகு வளைந்து வயிறு தரையை நோக்கித் தாழும்.

# இழுக்கும் மூச்சு அடிவயிறுவரை செல்ல வேண்டும். மூச்சு நிரம்பி அடிவயிறு உப்ப வேண்டும்.

# அப்படி இழுக்கப்பட்ட மூச்சை அப்படியே சில விநாடிகள் வைத்திருக்கவும். 5 முதல் 30 விநாடிகள்வரை அவரவர் திறனுக்கேற்ப வைத்திருக்கலாம்.

# சீராகவும் மெதுவாகவும் மூச்சை வெளியேற்றியபடி தலையைச் சற்றே தாழ்த்த வேண்டும். தலை பூமிக்கு இணையாக, கைகளுக்கு நடுவே இருக்க வேண்டும். வளைந்த முதுகு நேராக வேண்டும்.

# இந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும்.

# ஐந்து முதல் பத்து முறை இதைத் திரும்பத் திரும்பச் செய்யவும்.

வெளியேறும் முறை

# கைகளை எடுத்துவிட்டு மீண்டும் முழங்கால்களில் அமர்வது. முழங்காலில் அமர முடியாதவர்கள் சாதாரணமாக அமரலாம்.கவனிக்க வேண்டியவை:

# ஆசன நிலையில் இருக்கும்போது கைகள் இரண்டும் வளையாமல் இருக்க வேண்டும்.

# கழுத்து, முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் இறுக்கம் இருக்கக் கூடாது.

# முதுகு கூன் போடாமல் இருக்க வேண்டும். சிங்கம் நிற்கும் நிலையைக் கற்பனை செய்துகொண்டால் முதுகு தானாக நிமிரும்.

பலன்கள்

# பொதுவானவை: அடிவயிறு சுருங்குவதால் அந்தப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். இதனால் தொப்பையும் கரையும்.

# கைகள், அடிவயிறு, முதுகு, இடுப்பு ஆகியவை வலுப்பெறும்.

# இடுப்பு, முதுகு வலிக்குச் சிறந்த நிவாரணம். உடலின் எடையைக் கைகளிலும் கால்களிலும் சமமாகப் பிரித்து அளிப்பதால் கால், இடுப்புப் பகுதிகளின் சிரமம் குறைகிறது.

# பெண்களுக்கு இடுப்புப் பகுதியைச் சீராக இயக்க வைத்துக் கர்ப்பப் பையைப் பலப்படுத்தும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்