எல்லா நலமும் பெற: இறைச்சியில் எந்தப் பகுதி சத்தானது?

By ஷங்கர்

எனது வயிறு எவ்வளவு அமிலத்தை உற்பத்தி செய்கிறது?

24 மணிநேரத்தில் நம் வயிறு இரண்டு லிட்டர் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. சவரம் செய்யும் ஒரு பிளேடைப் போட்டால் அதன் நிறை 37 சதவீதம் காணாமல் போகும் அளவுக்கு அந்த அமிலத்தின் வீரியம் அதிகம். உலோகப் பொருட்களில் படர்ந்துவிட்ட துருவை நீக்க ஹைட்ரோக்ளோரிக் அமிலம் பயன்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் வீரியம் வாய்ந்த ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தால் வயிறு பாதிக்கப்படாதா?

வயிறு அமிலத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகக் கோளைப்படிவத்தால் போர்த்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அது புதுப்பிக்கப்படும்.

இறைச்சியில் எது சத்துமிகுந்த பகுதி?

கோழியில் நெஞ்சுப் பகுதியை அதிகம் பேர் சாப்பிடுவது போல சத்துக்குறைந்த தசைப்பகுதியைத் தான் நிறைய மக்கள் விரும்பி உண்கின்றனர். பழங்காலத்தில் விலங்கு, பறவைகளின் கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்கள் தான் விரும்பி உண்ணப்பட்டன. சத்துக்குறைந்த மிச்சப் பாகங்கள் நாய்களுக்கு எறியப்பட்டன.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மனிதகுலம் வென்றுவிட்டதா?

மிகச் சொற்பமாகவே வெற்றி பெற்று உள்ளது. நுரையீரல், நெஞ்சு, ப்ரொஸ்டேட் சுரப்பி புற்றுநோய்களால் இறப்பவர்கள் விகிதம் அதிகமாகவே உள்ளது.

பழங்காலத்தில் புற்றுநோய் இருந்ததா?

புற்றுநோய் நவீனகால நோயாகும். ஆப்பிரிக்க, செவ்விந்தியக் கலாச்சாரங்களில் புற்றுநோய் மிக அரிதாகவே இருந்துள்ளது. பிரேசில், ஈக்வடார் நாடுகளில் 60 ஆயிரம் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு புற்றுநோயாளி கூட இல்லை. மேற்கத்திய உணவுமுறை அறிமுகத்துக்கு முன்னர் கீழைத்தேய நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் குறைவாகவே இருந்துள்ளது.

கொழுப்பைக் கூட்டும் உணவுப் பொருட்கள் எவை?

மிட்டாய்கள், கேக்குகள், சிக்கன் சார்ந்த உணவுகள், பீட்சா, பர்க்கர், பால் பொருளில் செய்யப்பட்ட இனிப்புகள், பாலாடைக்கட்டி.

மூட்டு வலியை மருந்துகள் எடுக்காமல் இயற்கையாகத் தீர்க்க முடியுமா?

மீன் எண்ணெய் உட்கொள்வதால் வலி இல்லாமல் போகிறது. முடக்குவாதத்துக்கு காரணமான பிரச்சினையை தீர்க்கும் வல்லமை மீன் எண்ணெய்க்கு இருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மூட்டு வலியைத் தீர்க்கும் ஒமேகா 3 கொழுப்பு, மீன் எண்ணெய்யில் அதிகமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்