காயமே இது மெய்யடா 05: மழைக் குளியல் போடலாமா..?

By போப்பு

இது மழைக்காலம். தோலின் பதத்தன்மை யையும், உடல் நலனையும் மேம்படுத்த மழைநீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘மழை நீரா… அய்யய்யோ ஜலதோசம் பிடிச்சுக் குமே?’ என்று நீங்கள் பதறுவது காலம், தூரம் கடந்து எனக்குக் கேட்கிறது. மழையின் ஜலம் எப்படி தோசம் ஆகும்? மழைநீர் ஆபத்து என்று, வணிக விளம்பரங்கள் நமது தலையில் தவறான பாடத்தைப் புகட்டியுள்ளன.

மழைநீரை அமிழ்தம் என்கிறான் நமது வள்ளுவப் பாட்டன். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது தமிழின் உயிர்ப்பானப் பழமொழி. இந்தப் பூமியின் உயிரே நீர்தான். நீரிலிருந்துதான் உயிரின் தோற்றம் தொடங்கியது என்ற அறிவியல் நாம் அறியாததல்ல.

ஆனால் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட இன்றைய வாழ்க்கை முறை மழையை, மழைநீரை அசூயையுடன் பார்க்கப் பழக்குகிறது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் மழை பெய்தால் ‘இந்தச் சனியன் பிடிச்ச மழைக்கு நேரங்காலம் கிடையாது’ என்று சலித்துக்கொள்கிறோம்.

காலையில் பெய்யக் கூடாது. மதியம் எங்காவது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்போது பெய்யக் கூடாது. மாலையில் வீடு திரும்பும்போது பெய்யக் கூடாது. அப்புறம் எப்போது பெய்யலாம்? போனால் போகிறது, நாம் தூங்கும்போது பின்னிரவில் பெய்துவிட்டு காலைக்குள் தன் வேலையை முடித்துக் கொள்ளட்டும் மழை!

மழையே மீண்டும் மீண்டும் வா!

இயற்கையிலிருந்து விலகிய வாழ்முறையால் இந்த மனப்பாங்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழை என்ன ராப்பிச்சையா அல்லது அர்த்த ஜாமத் திருடனா…? இரவோடு இரவாக மூன்றாம் பேருக்குத் தெரியாமல் வந்துவிட்டுப் போக…?

சிலப்பதிகாரம், முதல் வரியில் கடவுளைப் பாடவில்லை. திங்களைப் போற்றி, அடுத்து ஞாயிறைப் போற்றி, மூன்றாவது பத்தியில் ‘மாமழை போற்றுதும்’ என்கிறது. ‘கருணை சுரக்கும் நீர்’ என்கிறது. மழையைச் சனியன் என்று திட்டுகிற சமூகம், நீருக்கு அண்டை அயலாரிடம் கையேந்தியே உலர்ந்து போகும்.

உண்மையில் மழைநீர், நம் உடலில் தேங்கியுள்ள கழிவைச் சளி எனும் ஊடகத்தின் வழியாக வெளியேற்ற மட்டுமே செய்கிறது. மழையில் குளிக்கும்போதோ குளித்த பின்னரோ பிடிப்பதில்லை சளி. சளி பற்றி வேறுவொரு இடத்தில் விரிவாகப் பார்ப்போம்.

மழை நீரில் நனைந்ததும் சளி பிடிக்கிறதென்றால், உள்ளே அத்தனை கழிவு தேங்கி இருக்கிறதென்று பொருள். எனவே மழைநீரில் விளையாட குழந்தைகள் ஓடினால் அவர்களைத் தடை செய்யாதீர்கள். ‘ரெயின் ரெயின் கோ அவே’ எனப்பாடச் சொல்லாதீர்கள்.

பளபளப்பாக்கும் தோலைப் மழைநீர்

உடல் நடுங்கும்வரை மழைநீரில் குளிக்கலாம். நடுக்கத்தை மீறிக் குளிக்கும்போதுதான் குளிர்க் காய்ச்சல் தோன்ற வாய்ப்பாகும். அதற்காக மழைநீர் நல்லது என்று குழந்தையின் விருப்பத்தை மீறியும் மழைநீர் ஊற்றக் கூடாது. ஏனென்றால் குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு உடலில் போதிய வெப்ப ஆற்றல் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் மழைநீரில் குளித்தால் கண்டிப்பாக எதிர்விளைவை உருவாக்கும்.

மழைநீரில் குளிக்க விரும்பும் குழந்தைகளுடன் பெரியவர்களும் குளிக்கலாம். குளித்து முடித்தவுடன் தோல் வழக்கத்துக்கு மாறான புத்துணர்வு பெறுவதையும், கண்களில் ஒளி பெருகுவதையும் நம்மால் உணர முடியும். குறிப்பாக மழைநீரில் குளிக்கும் போது தோலில் தோன்றும் பளபளப்பு இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிக்கும். காரணம் மழைநீர் தோலுக்குப் பலன் தருவதோடு உள்ளுறுப்புகளின் இயக்கத்தையும் செம்மைப்படுத்துகிறது. வறண்ட தோல் உடையவர்களுக்கு மழைநீர் வரப் பிரசாதம்.

மழைநீரைக் குளிக்க மட்டு மல்ல குடிக்கவும் செய்யலாம். மழைக்காலம் முடியும் மட்டும் எங்கள் வீட்டு மாடித் தண்ணீரை மட்டுமல்லாமல் அக்கம் பக்க வீட்டு மாடி நீரையும் பெரிய ‘ட்ரம்’மில் பிடித்து வைத்துக்கொண்டு குளிப்பது எங்கள் வீட்டாரின் பழக்கம்.

மழைநீரில் கிருமிகள் இருக்குமே. ஆம், இருக்கும்தான். ஆனால், அவை   அத்தனையும் உடலுக்குத் தீமை செய்யும் கிருமிகள் அல்ல. கிருமி என்றாலே தீமை செய்யக்கூடிய வில்லன் என்று தவறான ஒரு கற்பிதம் நமக்குள் இருக்கிறது.

சமநிலை வெப்பமும் குளிர்ச்சியும்

புறத் தோலின் வழியாகவும் சரி, உள்ளுக்குள்ளும் சரி… உடலை உடனுக்குடன் வெப்பம் அல்லது குளிர்ச்சிப்படுத்துதல் கூடாது. அது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தடுமாறச் செய்யும். உடலில் நிகழும் ஒவ்வொரு திடீர் நிலைமாற்றமும் உள்ளுறுப்புகளை, குறிப்பாகச் சிறுநீரகத்தையும் இதயத்தையும் கடுமையாகப் பாதித்து செல்களின் ஆயுளைக் குறைக்கும். புதுப்பிக்கப்படும் செல்லும் குறைவாயுளுடனே பிறக்கும். இது உடலின் ஒட்டுமொத்த வாழ்நாளையும் குறைத்துவிடும்.

இன்றைய நோய்ப் பெருக்கத் துக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று, உடலின் வெப்பம் சீராகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதும் ஆகும். மூட்டு வலி தொடங்கி கர்ப்பப் பை கட்டி வரை அனேக நோய்களுக்கு உடலில் தேங்கும் வெப்பம் அல்லது நீர் முதன்மைக் காரணியாக இருக்கிறது. உடலின் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் சமநிலைக்குக்கொண்டு வருவதன் மூலமாக அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கிறது இயற்கை மருத்துவம்.

உடலில் தேங்கியுள்ள காற்று, நீர்க் கழிவுகளை வாழை இலைக் குளியல், மண் குளியல், முதுகுத் தண்டுக் குளியல், வயிற்றுக் குளியல் போன்ற பல்வேறு குளியல் முறைகள் மூலமாக நீக்கி உடலின் வெப்பத்தைத் தணியச் செய்கிறார்கள்.

பல திரை நட்சத்திரங்களும் இதுபோன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு புத்திளமையுடன் இன்னொரு சுற்றுக்கு இறங்குவதைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் அன்றாட வாழ்க்கை முறையில் நமக்குச் சாத்தியமான குளியல் வகைகள் குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்