மரீசி என்னும் முனிவரின் பெயரால் வழங்கப்படும் ஆசனம் இது. மரீசி என்றால் ஒளிக் கீற்று எனப் பொருள்.
மரீச்யாசனத்தில் பல நிலைகள் உள்ளன. மிகவும் கடினமான நிலைகளும் உண்டு.
இங்கே நாம் பார்ப்பது மரீச்யாசனத்தின் எளிமையான நிலையை.
செய்முறை
# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.
# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.
# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.
# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.
# வலது புறம் உடலைத் திருப்புங்கள். இப்போது மூச்சு வெளியே விட வேண்டும்.
# இப்போது இடது கையை வலது காலைச் சுற்றிப் பின்புறம் கொண்டுவாருங்கள்.
# வலது கையைப் பின்புறமாகக் கொண்டுசென்று இடது கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
# தலை வலது புறம் திரும்பியிருக்க, பார்வை பின் பக்கம் இருக்க வேண்டும்.
# உடல் நேராக இருக்கட்டும். தோள்பட்டைகள் விரிந்திருக்கட்டும்.
# நீட்டி இருக்கும் கால் திரும்பக் கூடாது.
# இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும். அப்படி இருக்கும்போது மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். ஐந்து முறை ஆழமாக, மெதுவாக மூச்சு இழுத்துவிட முடிந்தால் நல்லது.
பயிற்சி
# எடுத்த எடுப்பிலேயே சிலருக்கு இதைச் செய்ய முடியாமல் இருக்கலாம். அவர்கள் கைகளை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யாமல் உடலைத் திருப்புவதில் மட்டும் கவனம் செலுத்திப் பயிற்சி செய்யலாம்.
# பயிற்சி செய்யும்போது ஆரம்பக் கட்டத்தில் உடல் சிறிது முன்னே வளையும். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நிமிர்ந்து இருக்கும் நிலையிலேயே உடலைத் திருப்ப முடியும்.
# நன்கு திருப்புவதற்கேற்ற நெகிழ்ச்சி உடலுக்கு வந்துவிட்ட பிறகு, கைகளை இணைக்க முயற்சி செய்யலாம்.
பலன்கள்
# தோள்பட்டைகள் விரிவடையும். தோற்றப் பொலிவு கூடும்.
# உட்புற உறுப்புகளின் செயல்திறன் அதிகரித்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.
# அடிவயிறு அழுந்தப்பட்டுள்ள நிலையில், ஆழமாக மூச்சை இழுத்து விடுவது நுரையீரலை விரியச் செய்யும்.
# மிதமான முதுகு வலி, இடுப்புப் பகுதியின் அவஸ்தை ஆகியவற்றை இது போக்கும்.
# முதுகெலும்பை உறுதிப்படுத்தும்.
# இடுப்பை வலுப்படுத்தும். ஊளைச் சதையைக் குறைக்கும்.
# அடி வயிறு, சிறுகுடல், கல்லீரல் முதலான இடங்கள்வரை ஆக்ஸிஜன் செல்ல வழிவகுக்கும்.
# விலாப்புறத்தை விரிவடைய வைப்பதால் விலாப்புறங்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜனை அதிகரிக்க வைக்கிறது.
# பெண்களுக்கு மாத விலக்குக் கால அவதிகளைக் குறைக்கிறது.
எச்சரிக்கை
# கர்ப்பமாக இருக்கும்போது உடலை முறுக்கக் கூடாது.
# அடிவயிற்றில் ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்திருக்கும் பட்சத்தில் இதைச் செய்ய வேண்டாம்.
# குடலிறக்க நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago