அரும்புகள் மலரட்டுமே!

By டாக்டர் அரவிந்தன் சிவக்குமார்

ஒரு தேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த விடுதியின் கீழ்த் தளத்தில் உணவு உண்ணும் வளாகம் இருக்கிறது. அன்று உணவு உண்ணும் வேளையில் வழக்கத்துக்கு மாறாகத் துர்நாற்றம் வீசியது. மாணவர்கள் புகார் தெரிவித்தனர். சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறதா அல்லது வேறு ஏதாவதா என்று வெவ்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

விடுதியில் சில அறைகள் திறந்திருந்தன. சில அறைகள் பூட்டி இருந்தன. ‌குறிப்பிட்ட ஓர் அறையின் உள்ளிருந்து துர்நாற்றம் அதிகமாக வந்ததும், உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த அந்த மாணவரின் அறையைத் தட்டியும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் பயனில்லை. கதவு உடைக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். அவர் இறந்து சில நாள்கள் ஆகியிருந்தன. ஏன் இந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார் என்கிற கேள்வி ஒரு‌புறம் இருக்கலாம். ஆனால், அவர் இறந்து சில நாள்கள் கடந்தும் யாரும் அவரைத் தேடவில்லை என்பதே மிகவும் துயரமான செய்தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE