தேசிய கண் தான வாரம் | ஒரு விழியால் நால்வருக்குப் பார்வை

By டாக்டர் பெ.ரங்கநாதன்

விவசாயி ஒருவர் வேலை செய்துகொண்டிருந்த போது அவரது கண்ணில் குச்சி பட்டுவிட்டது. அதைச் சிறு காயம்தானே எனக் கவனிக்காமல் விட்டுவிட்டார். மூன்று நாள்களுக்குப் பிறகு கண்ணில் பார்வை குறைந்து, வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் விவசாயியின் பார்வை 90% குறைந்துவிட்டதாகவும் அவரது கண்ணில் பூஞ்சைத் தொற்றினால் கருவிழி முழுவதும் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர், விவசாயிக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது கண்ணில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்றைச் சரிசெய்ய இயல வில்லை. பார்வையிழந்து வலியில் தவித்த விவசாயியின் சிதைந்த கருவிழியை நீக்கிவிட்டு, இறந்த ஒருவரிடம் இருந்து கண் தானம் மூலம் பெற்ற கருவிழியைப் பொருத்தி அறுவைசிகிச்சை (Therapeutic Keratoplasty) அளிக்கப் பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நீங்கி விவசாயிக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE