டாக்டர் பதில்கள் 11: வெண்புள்ளிகள் நீங்குமா?

By கு.கணேசன்

னக்கு வயது 61. எனது உடலில் 2004ஆம் வருடம் முதல் வெண்புள்ளிகள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. நான் கடந்த ஏழு மாதங்களாகச் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அதனால், தற்போது மீண்டும் வெண்புள்ளிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. நீண்டகாலச் சிகிச்சையாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாமா? வெண்புள்ளிகள் மேலும் பரவாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் உடலில் 10% அளவுக்குத்தான் வெண்புள்ளிகள் உள்ளன. தகுந்த ஆலோசனை வழங்கவும். - நாராயணன் தன்ராஜ்.

நவீன மருத்துவத்தில் ‘லூக்கோடெர்மா’ (Leucoderma) என்றும் ‘விட்டிலைகோ’ (Vitiligo) என்றும் இரண்டு பெயர்களில் அழைக்கப்படும் வெண்புள்ளிகள் கிருமிகளால் ஏற்படும் நோயல்ல; தொட்டால் ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோயுமல்ல. இது ஒரு ‘தன்தடுப்பாற்றல் நோய்’ (Autoimmune disease). அதாவது, உடலில் இயங்கும் தடுப்பாற்றல் மண்டலம் தடுமாறும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. தோலுக்கு நிறம் அளிக்கும் ‘மெலனோசைட்’ எனும் செல்களை நம் தடுப்பாற்றல் மண்டலமே அழித்துவிடுவதால் இது ஏற்படுகிறது. இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே. இது அறிவியல் ரீதியாகத் தீர்க்கக்கூடியது. நவீன மருத்துவத்தில் மட்டுமல்லாமல் மாற்று மருத்துவத்திலும் இதற்குத் தீர்வு உண்டு. எந்த மருத்துவத்தைக் கடைப்பிடித்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். தொடர் கவனிப்பு ஒன்றுதான் தோலின் நிறத்தை முழுமையாகப் பெற உதவும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்