மழைக்கால நோய்களும் தப்பிக்கும் வழிகளும்

By எல்னாரா

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கி, தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனினும் மழைக்கால நோய்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

வைரஸ் காய்ச்சல்: மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது ஃபுளூ காய்ச்சல். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமி களால் இது ஏற்படுகிறது. நோயாளி தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் இந்தக் கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலுக்குச் சிறப்புச் சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அவஸ்தைகளைக் கட்டுப்படுத்த ‘ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்' பலன் தரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

வணிகம்

31 mins ago

உலகம்

22 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்