பத்து நண்பர்கள் - பாடல் - அழ. வள்ளியப்பா

By செய்திப்பிரிவு

மொத்தம் நண்பர்கள் பத்துப் பேர்
நித்தம் எனக்கே உதவிடுவர்.

நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.

பல்லைத் துலக்க ஒரு நண்பர்
பாடம் எழுத இரு நண்பர்.

உணவை ஊட்ட ஐவர்களாம்
உடலைத் தேய்க்கப் பத்துப் பேர்.

இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன்!

என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள் போல்

உங்களிடத்தும் பத்துப் பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் யார் யார் தெரிகிறதா?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.

இருகை விரித்துக் காட்டுகிறேன்
எண்ணிப் பார்த்தால் பத்துப் பேர்!


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

47 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்