தினுசு தினுசா விளையாட்டு: கொடி பறக்குது!

By மு.முருகேஷ்

‘கொடி பறக்குது’ விளையாட்டில் 20 குழந்தைகள்வரை சேர்ந்துகொள்ளலாம்.

எப்படி விளையாடுவது?

நடுவராக ஒருவரை நியமித்துவிட்டு, மீதிக் குழந்தைகளை சம எண்ணிக்கையிலான இரு அணிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

வட்டமிட்டு. அந்த வட்டத்தின் நடுவில் ஒரு சிறிய குச்சியை ஊன்றிக்கொள்ளுங்கள். இரு அணிகளும் தலா 15 அடி தொலைவில் நின்றுகொள்ளுங்கள். வட்டத்தின் இடதுபுறமுள்ள அணியில் நிற்பவர்களுக்கு இடமிருந்து வலமாக 1 முதல் 10 வரை எண்களை வரிசையாகச் சொல்லுங்கள். அதேபோல், வலதுபுறம் நிற்கும் அணிக்கு வலமிருந்து இடமாக எண்களைச் சொல்லுங்கள்.

குச்சியின் அருகே நிற்கும் நடுவர், 1 முதல் 10 வரையுள்ள எண்களில் ஏதேனும் ஓர் எண்ணைச் சொல்ல வேண்டும். 6 என்ற எண்ணை நடுவர் சொன்னால், 6 என்ற எண் கொண்ட இருவரும் ஓடிவந்து, வட்டத்தில் இருக்கும் குச்சியை யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு, மீண்டும் அவர் இடத்துக்கு சென்றுவிடவேண்டும். அவ்வாறு சென்றுவிட்டால், உங்களுக்கு ஒரு ‘பாயிண்ட்’ கிடைக்கும். குச்சியை எடுத்துக்கொண்டு ஓடிவருபவர் நேர்க்கோட்டுக்கு வருவதற்குள், எதிர்க்குழுவில் இருப்பவர் அவரைத் தொட்டுவிட்டால், அந்த குழுவுக்கு ’பாயிண்ட்’ போய்விடும். நடுவர் அழைத்த எண்ணுக்குரிய இருவரும் குச்சியை எடுக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி 1 நிமிடத்துக்கு மேல் நின்றால், நடுவர் வேறு எண்ணை அழைக்க வேண்டும். அதிக பாயிண்ட் எடுத்தவர்கள் வெற்றியாளர்கள்.

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்