குட்டி மானுக்கு வந்த ஆபத்து

By ஜெய்

சிறுத்தைக்கு அடுத்தபடியா ரொம்ப வேகமாக ஓடுற விலங்கு மான்தான். அதுனாலதான் நீங்க துள்ளிக் குதிச்சு விளையாடுறப்ப ‘மான் குட்டி மாதிரி ஓடுறேன்னு’ அம்மா சொல்லுவாங்க. ‘Bambi’ படத்துல ஒரு மான் இருக்கு. அதோட பேரும் பாம்பிதான்.

முயல், எலி, கோழி, வாத்து, அணில், மைனா, ஆந்தைன்னு நிறைய உயிரினங்கள் ஒற்றுமையா ஒரு காட்டுல சேர்ந்து வாழுதுங்க. அந்தக் காட்டோட ராஜா பாம்பியோட அப்பா மான். அப்படின்னா வளர்ந்து பெரியவன் ஆனதும் பாம்பிதான் அந்தக் காட்டோட அடுத்த ராஜா.

பாம்பி பொறந்ததும் அந்தக் காட்டுல உள்ள பறவைகள், குட்டிக் குட்டி விலங்குகள் எல்லாம் பார்க்க வருது. பாம்பி பொறந்து கண்ணு முழுக்கிறதுக்கு முன்னாடியே ஒரு முயல்கூட ஃப்ரண்ட் ஆயிடுது. பொதுவாகப் பெரும்பாலான விலங்குகள் பொறந்ததும் நடக்க ஆரம்பிச்சிரும். மனுஷங்கதான் நடக்க நாள் ஆகும். பாம்பியும் பொறந்ததுமே நடக்க வரலை. தத்தி தத்தி நடக்குது. பாப்பா எல்லாம் நடந்து நடந்து கிழே விழும்ல அது மாதிரி தொப்புன்னு கிழே விழந்திடும். அப்போ முயல் தன் அண்ணா, தங்கையோட வந்து பாம்பிக்கு நடக்கச் சொல்லிக் கொடுக்கும். நடக்கும்போது பள்ளம் வந்தால் அதைத் தாண்டுறது எப்படினு அந்த முயல் கூட்டம் சொல்லிக் கொடுக்கும்.

அப்புறம் பாம்பி மான் குட்டிக்குப் பேசவும் தெரியாதில்லையா? அதுக்குப் பேசவும் முயல் குட்டிதான் கத்துத் தருது. நீங்க குட்டிப் பாப்பாவா இருக்குறப்ப அம்மாதானே எல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பாங்க. இது மரம், மேல சுத்துறது ஃபேன் அப்படினு உங்களுக்கு ஒண்ணு ஒண்ணாச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க இல்லையா? அதுபோல பாம்பிக்கு முயல் சொல்லிக் கொடுத்துச்சு.

பறவைங்களப் பார்த்து இது பறவை (Bird) அப்படினு சொல்லிக் கொடுத்துச்சு. அப்போ ஒரு வண்ணத்துப்பூச்சி (Butterfly) பறந்து வறப்ப, பாம்பி பறக்கிற எல்லாம் பறவைன்னு நினைச்சு, அதைப் பாத்து ‘பறவை’ அப்படினுச்சு. முயல் குட்டிக்கு அது காமெடியாப் போச்சு. விழுந்து விழுந்து சிரிச்சுது. அப்புறம் அது பறவை இல்லை, வண்ணத்துப்பூச்சின்னு சொல்லிக் கொடுத்துச்சு.

இப்படி பாம்பி ஒவ்வொரு விஷயம் கத்திக்கிட்டு வந்துச்சி. மேல இருந்து தண்ணி வந்தப்ப, அம்மா கிட்ட போய் அது என்னதுன்னு கேட்டுச்சு, அம்மா மான் அதுதான் மழைன்னு சொல்லுச்சி. பாம்பிக்கு மழை தெரிஞ்சது. ஒரு வெள்ளைக் கட்டி, காடு முழுக்க கிடக்க, அது என்னனு அம்மாகிட்ட கேட்டப்ப, அதுதான் பனிக் கட்டின்னு பாம்பிக்குத் தெரியவந்துச்சு.

ஒரு நாள் மேயுறதுக்காக அம்மாவும் பாம்பியும் போறாங்க. அங்க பாலன்னு பாம்பிக்குப் புது மான் ஃப்ரண்ட் கிடைக்குது. அதுவும் பாம்பி மாதிரி ஒரு மான் குட்டிதான். அது மட்டுமில்லாம அங்க நிறைய மான்கள் கூட்டமா இருந்துச்சு. பாம்பிக்கு அதைப் பாத்ததும் ஒரே குஷி. மற்ற மான்கள் மாதிரி குதிச்சு குதிச்சு பாம்பியும் பாலன்னும் ஒரே ஆட்டம். அப்ப பார்த்து திடீர்னு பறவைகள் எல்லாம் கத்திக்கிட்டே பறந்து போகுதுங்க. திடீர்ன்னு எல்லா மிருகங்களும் ஒரே ஓட்டம். பாம்பிக்கு எதுக்கு ஓடுறாங்கன்னு தெரியாமா ‘அம்மா’ ‘அம்மா’ன்னு கத்திட்டு ஓடி எப்படியோ தப்பிக்குது. அம்மா கிட்ட

ஏன் ஓடுனாங்கனு கேட்டுச்சு. ‘காட்டுக்குள்ள மனுஷங்க நம்மளை பிடிச்சுட்டுப் போக வந்துருக்காங்க’ அப்படினு அம்மா மான் சொல்லிச்சு. பாம்பிக்குப் பயம் வந்திடுச்சு.

இன்னொரு நாள் பாம்பி தன் அம்மாவோட புல்லை சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப மறுபடியும் மனுஷங்க வந்து துப்பாக்கில சுட, பாம்பி ஓடுது. அம்மா மான் பின்னாடியே ஓடிச்சு. பாம்பி பயத்துல

கண்ணு மண்ணு தெரியாமா ஓடி ஒரு குகைக்குள்ள போய் திரும்பிப் பார்த்தா, அம்மா மானைக் காணோம். அதைப் பிடிச்சுட்டுப் போயிடுறாங்க. இப்ப அம்மா இல்லாமா

இந்தக் குட்டி பாம்பி என்ன பண்ணும்? அது எப்படி வளர்ந்துச்சு? காட்டோட ராஜா ஆச்சான்னு ‘Bambi’படம் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 mins ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்