குழந்தைப் பாடல்: சின்னப் பையன்

By அழ. வள்ளியப்பா

கங்கை, யமுனை, சரஸ்வதி

கலக்கும் இடத்தில் உள்ளது,

எங்க நேரு பிறந்ததாம்

இனிய நகரம் அலகாபாத்.

வருவாய் மிகவும் உடையவர்;

வக்கீல் தொழிலில் சிறந்தவர்;

அருமை நேரு தந்தையார்;

அவரின் பெயரே மோதிலால்.

பண்பு மிகுந்த அம்மையார்;

பழகுதற்கு இனியவர்;

அன்பு மிக்க நேருவின்

அன்னை சொரூப ராணியாம்.

சின்ன வயதில் ஜவஹரைச்

செல்லமாக அனைவரும்

‘நன்னா’ என்றே அழைத்தனர்.

என்ன அர்த்தம் தெரியுமா?

சின்னப் பையன் என்பதை

‘நன்னா’ என்பர் இந்தியில்

சின்னப் பையன் வளர்ந்தனன்;

‘சிறந்த மனிதர்’ ஆயினன்!

(அழ. வள்ளியப்பாவின் ‘நேரு தந்த பொம்மை’ நூலில் இடம் பெற்ற ஒரு பாடல்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்