வண்ண வண்ண மிட்டாய்! - பாடல் - அழ. வள்ளியப்பா

By அழ. வள்ளியப்பா

மிட்டாய் வாங்கிடுவாய் - தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.

வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க, முழுக்க இனிக்கும் மிட்டாய்.

எண்ண எண்ணத் தித்திக்கும் மிட்டாய்;
எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு,
அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.

பல்லும் நாக்கும் வர்ணந் தீட்டிப்
பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
பையப் பையச் சப்பும் மிட்டாய்.

குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
கூடிக் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வாயைமூட
அம்மாவுக்கு உதவும் மிட்டாய்!

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

58 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்