காகிதத்தை ரூபாயாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னால், எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள் அல்லவா! நீங்களும் இந்த மேஜிக்கைச் செய்துகாட்டி, நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள், பார்க்கலாம்!
என்னென்ன தேவை?
200 ரூபாய்
காகிதம்
» கிளி… கிளி… கிழி… கிழி... - இ. ஹேமபிரபா
» கிழிந்த காகிதம் முழுக் காகிதமாக மாறும் அதிசயம்! - ஜி. சுரேஷ்
எப்படிச் செய்வது?
மேஜிக் செய்யும் முன் செய்ய வேண்டியவை:
200 ரூபாய் நோட்டு அளவுக்கு காகிதத்தை வெட்டி வைத்துக்கொள்ளவும். அதை நான்கு மடிப்பாக மடித்து, பிரித்து வைத்துக்கொள்ளவும்.
200 ரூபாய் நோட்டையும் நான்கு மடிப்பாக மடித்துக்கொள்ளவும்.
இரண்டையும் ஒரே மாதிரியாக மடிப்பது முக்கியம்.
மேஜிக் செய்யும்போது செய்ய வேண்டியவை:
• மடித்து வைத்துள்ள 200 ரூபாயை, காகிதத்தின் இடது கை ஓரத்தில் மறைத்துக்கொள்ளுங்கள்.
• காகிதத்தின் முன்பக்கத்தை மட்டும் உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள்.
• மறைத்து வைத்துள்ள ரூபாய் நோட்டு தெரியாமல், காகிதத்தை ஏற்கெனவே மடித்த வாக்கில் முன்பக்கத்தை நோக்கி மடியுங்கள்.
• அப்படி மடிக்கும்போது காகிதம் முன்புறமும் ரூபாய் நோட்டு பின்புறமும் இருக்கும்படி, இடது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரலில் பிடித்துக்கொள்ளுங்கள்
• 'ஆபரக... டாபரா... கிலிகிலி... பூம்...’ என்று மந்திரம்போல் ஏதாவது சொல்லி, நண்பர்களின் கவனத்தைத் திசைதிருப்புங்கள். வலது கையை இடது கை நோக்கிக் கொண்டுவந்து, இடது கை கட்டைவிரலால் காகிதத்தை லேசாக முன்னால் தள்ளி, வலது உள்ளங்கையில் காகிதத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். (பயிற்சி செய்தால்தான் பிடிக்கமுடியும்).
• இடதுகை விரலில் இருக்கும் 200 ரூபாய் நோட்டை வலது கைவிரலின் மூலம் பிரித்துக் காட்டினால், உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago