நான் தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கிறது. தண்ணீரிலேயே இருக்கும் மீனுக்குச் சளி பிடிப்பதில்லையே, ஏன்?
- நடேஷ், 2-ம் வகுப்பு, பாத்திமா கான்வென்ட் மெட்ரிக். பள்ளி, ராமபுரம், குமரி.
நாம் வேறு உயிரினம், மீன் வேறு உயிரினம். நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ப மனித உடல் உருவாகியிருக்கிறது. மீன் தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப அதன் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வெப்ப ரத்தப் பிராணிகள். மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். அதனால் நமக்குச் சளி பிடிப்பதுபோல் மீனுக்குச் சளி பிடிப்பதில்லை.
தொற்றுநோய்க் கிருமியால்தான் (வைரஸ்) நமக்குச் சளி பிடிக்கிறது. அதேபோல மீன்களும் தொற்றுநோய் கிருமியால் பாதிக்கப்படலாம். ஆனால், அது நீங்கள் மூக்கை உறிஞ்சுவதுபோல் ஜலதோஷமாக இருக்காது, நடேஷ்.
சில பாத்திரங்களின் அடிப்பாகம் ஏன் தாமிரத்தால் செய்யப்படுகிறது டிங்கு?
- மெல்பின், 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.
இரும்பு, அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது, உலோகம் செறிவாக இருக்கும் இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களில் வெப்பம் குறைவாக இருக்கும். அதனால்தான் நாம் சமைக்கும்போது, அடியில் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கவனிக்காமல் விட்டால், தீய்ந்து பொருள் வீணாகிவிடுகிறது.
தாமிரம் நன்றாக வெப்பத்தைக் கடத்தக்கூடியது. வெப்பமும் ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. அதனால் சமைக்கும் பொருள் எளிதில் தீய்ந்துபோவதில்லை. எனவேதான் சில பாத்திரங்களின் அடிப்பாகம் தாமிரத்தால் செய்யப்படுகிறது, மெல்வின்.
மீன்பிடித் திருவிழா என்றால் என்ன டிங்கு?
- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மழை, விளைச்சல், மகிழ்ச்சிக்காக இந்த மீன்பிடித் திருவிழாக்களை நடத்துகின்றனர்.
கண்மாய் நீரில் இப்படி மீன்பிடித் திருவிழா நடத்தினால், மழை பொழியும் என்றும் திருவிழா நடத்தவில்லை என்றால் வறட்சி வாட்டும் என்றும் மக்கள் நம்புகிறார்கள், பொதுவாக கண்மாயில் (ஏரி) நீர் குறைவாக இருக்கும்போதுதான் மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும், இனியா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago