உங்கள் நண்பர்களுக்கு ஒரு செய்தியை ரகசியமாக அனுப்ப வேண்டும். அது வேறு யார் கண்களுக்கும் தெரிந்துவிடக் கூடாது. எப்படி அனுப்பலாம்?
இரண்டு வெள்ளைக் காகிதங்கள், பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
எப்படிச் செய்வது?
* ஒரு வெள்ளைக் காகிதத்தை நன்றாகத் தண்ணீரில் நனைத்து, எடுங்கள்.
* முகம் பார்க்கும் கண்ணாடியில் அந்தக் காகிதத்தை ஒட்டுங்கள். ஈரமாக இருப்பதால் காகிதம் ஒட்டிக்கொள்ளும்.
* இன்னொரு வெள்ளைக் காகிதத்தை ஏற்கெனவே கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஈரக் காகிதத்தின் மீது ஒட்டுங்கள்.
* பென்சில் மூலம் நீங்கள் நினைத்ததை எழுதுங்கள்.
* மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிடுங்கள். இனி அது தேவையில்லை.
* கண்ணாடியில் ஒட்டியிருக்கும் காகிதத்தை காற்றில் நன்றாகக் காயவிடுங்கள்.
* நீங்கள் எழுதிய எழுத்துகள் அந்தக் காகிதத்தில் ஈரப்பதம் உள்ள வரை கண்களுக்குத் தெரியும். காகிதம் உலர உலர எழுத்துகள் மறைய ஆரம்பிக்கும்.
* காகிதம் முழுவதுமாகக் காய்ந்து, பழைய நிலைக்கு வரும்.
* காகிதத்தை உங்கள் நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்! எழுத்துகளே இல்லாத வெள்ளைக் காகிதத்தில் என்ன படிக்க முடியும் என்று கேட்பார்கள்.
* காகிதத்தின் மேல் சிறிது தண்ணீரைத் தெளிக்கச் சொல்லுங்கள்.
* தண்ணீர் தெளித்தவுடன் எழுத்துகள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்த எளிய மேஜிக்கைச் செய்து, உங்கள் நண்பர்களை அசத்துங்கள்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago