வாண்டு: ஹாய் பாண்டு, என்ன முகமெல்லாம் வாடியிருக்கு?
பாண்டு: அட போப்பா. எப்பப் பார்த்தாலும் எதிர்த்த வீடு, பக்கத்து வீட்டுல இருக்குற ஆன்டிங்க எல்லாம் யாருக்கு ஓட்டுப் போடலாம்னு அடிக்கடி பேசிக்கிறாங்க. அதைப் பத்தி கேட்டா, ‘நீ சின்னப் பையன்; உனக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு விரட்டிவிடுறாங்க.
வாண்டு: இதுக்குத்தான் முகத்தைச் சோகமா வச்சிருக்கியா? நம்ம ஊர்ல பதினெட்டு வயசு ஆனாதானே ஓட்டுப் போட முடியும். அதனால, விரட்டியிருப்பாங்க.
பாண்டு: அது எனக்கும் தெரியும்பா. ஓட்டு எப்பிடிப் போடுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா, தப்பா?
வாண்டு: தப்பே கிடையாது. ஆனா, நியூசிலாந்து நாட்டுல இப்படியெல்லாம் கிடையாது பாண்டு. நம்மள மாதிரி சின்னக் குழந்தைகள்கூட ஓட்டுப் போடுறது எப்படின்னு தெரிஞ்சு வச்சிசுருப்பாங்க.
பாண்டு: அடடே நல்ல விஷயமா இருக்கே. என்ன மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க?
வாண்டு: சொல்றேன் பாண்டு. நியூசிலாந்துல நம்ம தமிழ்நாட்டுல இப்போ நடக்கப்போகுதுல்ல, அது மாதிரி பொதுத்தேர்தல் நடக்குறப்ப, பசங்களும் ஓட்டுப்போட வாய்ப்பு கொடுக்குறாங்க. அந்தந்தப் பகுதியில யார் தேர்தல்ல நிக்குறாங்களோ அவுங்க பேரை அச்சிட்டு ஓட்டுச் சீட்டு கொடுப்பாங்க. பசங்க விருப்பப்பட்டவங்களுக்கு ஓட்டுப் போட்டு, அதை ஓட்டுப் பெட்டியில போடணும். அதுக்கப்புறம் அந்த ஓட்டுக்கள எண்ணுவாங்க. ஒவ்வொரு வகுப்புலையும் யார் யார் எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்காங்கன்னு முடிவை ஒப்பிட்டுப் பார்ப்பாங்க.
அப்படியா? அப்போ இந்த ஓட்டையும் தேர்தல்ல கணக்குல எடுத்துப்பாங்களா?
வாண்டு: இந்த ஓட்டையெல்லாம் கணக்குல எடுத்துக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்துல படிக்குறப்பவே தேர்தல் பத்தி தெரிஞ்சுக்க இப்படி ஏற்பாடு செய்யுறாங்க. சின்னப் பசங்க பெரியவங்க ஆன பிறகு அவுங்க ஓட்டுப் போடுறதுக்கு இப்பவே விழிப்புணர்வு கொடுக்குறாங்க. தேர்தல் மேலே நம்பிக்கை வரதுக்காக இப்படிச் செய்யுறாங்க.
பாண்டு: அப்போ அங்க இருக்குற எல்லா சின்னப் பசங்களும் இப்படி ஓட்டுப் போடுவாங்களா?
வாண்டு: பள்ளிக்கூடப் பசங்க ஓட்டுப் போட, முதல்ல அந்தப் பள்ளிக்கூடம் தேர்தல் கமிஷனில் பதிவுசெஞ்சுக்கணும். அப்படிப் பதிவு பண்ணாத்தான் ஓட்டுச் சீட்டு, ஓட்டுப் பெட்டியை அனுப்பிவைப்பாங்க. தேர்தல் எப்போன்னு இரண்டு வாரத்துக்கு முன்னாலயே பசங்களுக்குச் சொல்லிடுவாங்க. ஸ்கூல் டீச்சர் எப்படி ஓட்டுப் போடணும்னு பசங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க.
பாண்டு: கிட்டத்தட்ட உண்மையான தேர்தல்ல ஓட்டுப்போடுற மாதிரின்னு சொல்லு?
வாண்டு: ஆமா பாண்டு, உண்மையிலேயே தேர்தல் எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும். நியூசிலாந்து நாட்டு தேசியக் கொடியில மாற்றம் கொண்டுவர்றதுக்காகப் போன வருஷம் பொது வாக்கெடுப்பு நடந்துச்சு. அந்தப் பொது வாக்கெடுப்புல நியூசிலாந்துல கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சின்னப் பசங்க இப்படித்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க.
பாண்டு: அந்த நாட்டுல குழந்தைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்களே?
வாண்டு: அதுமட்டுமல்ல, அந்த நாட்டுல பள்ளிக்கூடப் புத்தகத்துல தேர்தல் பற்றியும், ஓட்டுப் போடுறது பற்றியும்கூடப் பாடம் வச்சிருக்காங்களாம். சின்னப் பசங்க ஓட்டு போடுற முறைக்கு ‘கிட்ஸ் வோட்டிங் புரோகிராம்’னு பேரு. இப்படியெல்லாம் அங்க சின்னப் பசங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க.
பாண்டு: நியூசிலாந்துல மட்டும்தான் இப்படியா?
வாண்டு: இல்லைப்பா. அமெரிக்காவுலகூட ஸ்கூல் பசங்களுக்குத் தேர்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, மாதிரி தேர்தல் நடத்திக் காட்டுவாங்களாம்.
பாண்டு: ஓ... நம்ம நாட்டுலகூட இப்படிப் பசங்களுக்குத் தேர்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துனா எவ்ளோ நல்லா இருக்கும்?
வாண்டு: பிற்காலத்துலயாவது இந்த முறை நம்ம நாட்டுலயும் வரும்ன்னு நம்புவோம் பாண்டு.
பாண்டு: நீ சொல்றதும் கரெக்ட்தான். அப்புறம், ஜெர்மனியில நாய் ஒண்ணு சிங்கமா மாறிய பிரபலமான கதையைப் பத்தி நீ பேப்பர்ல படிச்சியாப்பா?
வாண்டு: இதைப் பத்திக் கேள்விப்பட்டேன். ஆனா, படிக்கலை பாண்டு. உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்.
பாண்டு: ஜெர்மனியில போட்டோகிராபரா இருக்குற ஜூலி மேரி, தெருவுல சுத்திக்கிட்டுக் கிடந்த ஒரு நாய்க் குட்டியை வீட்டுட்டுப்போய் எடுத்து வளர்த்திருக்காங்க. அந்த நாய்க் குட்டி கொஞ்சம் வளர ஆரம்பிச்ச பிறகு அதோட நிறமும், கண்களும் பார்க்குறதுக்குச் சிங்கம் போலவே இருந்திருக்கு. உடனே அவருக்கு டக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கு. கடையில ரெடிமேடா விக்குற சிங்கமுடியை வாங்கிட்டு வந்து நாயோட தலை மேலே வச்சுவிட்டாரு. அதுக்கப்புறம் பார்த்தா நாய் சிங்கம் மாதிரியே இருந்திருக்கு.
வாண்டு: ஓ… டூப்ளிகேட் சிங்கம்னு சொல்லு.
பாண்டு: ஆமாமா, இந்த டூப்ளிகேட் சிங்கத்தை ஜெர்மனியில ஹாம்பர்க் நகர்ல பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் போட்டோ எடுத்திருக்காரு. அப்படி எடுத்த போட்டோவ இண்டர்நெட்டுல போட்டுருக்காரு. உடனே இந்த டூப்ளிகேட் சிங்கம் ‘பிக் சிட்டி லயன்'ற பெயர்ல பிரபலமாயிடுச்சு.
வாண்டு: இப்படியெல்லாம்கூட பிரபலமா? ஆனா, இந்தச் செய்தியைக் கேட்க ஜாலியாத்தான் இருக்கு. சரிப்பா, இப்போ நான் வீட்டுக்குப் போறேன். அப்புறமா பார்ப்போமா?
பாண்டு: சரிப்பா, டாட்டா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago