1. அண்டார்டிகா பாலைவனத்தில் பனி ஒருபோதும் ஆவியாகாது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிகப்பெரிய பனிப் பாலைவனம் இதுதான். அண்டார்டிகா பாலைவனம் உலகிலேயே மிகவும் குளிரானது. குளிர்காலத்தில் சராசரியாக மைனஸ் 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
2. திரைப்படங்களில் பெரும்பாலும் மனிதர்களே வசிக்காத பகுதிகளாகத்தான் பாலைவனங்கள் காட்டப்படுகின்றன. நிஜத்தில் உலகம் முழுவதும் உள்ள பாலைவனப் பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், இந்தப் பகுதிகளில் வாழ்க்கை கடினமாக உள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும், பயிர்களையும் விளைவிக்க முடியாது. பாலைவன வாழ்க்கை மிகவும் சவாலானது.
3. பாலைவனத் தாவரங்கள் வெயில் தாங்க முடியாமல் வாடிவிடுமா? இல்லை, பாலைவனத் தாவரங்கள் தண்ணீரைச் சேமிக்கின்றன. வறட்சியின்போது அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலான பாலைவனத் தாவரங்கள் மழை பெய்யும்போதெல்லாம் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய இலைகளைக் கொண்டுள்ளன.
4. அரேபிய பாலைவனம் உலகின் நான்காம் பெரிய பாலைவனமாகவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனமாகவும் கருதப்படுகிறது.
5. பாலைவன விலங்குகள் இரவில் வெளியே வருகின்றன. பயணிகளை அழைத்துச் செல்லும் ஒட்டகங்களைத் தவிர, பாலைவனங்களில் பகலில் விலங்குகள் வெளிவருவதில்லை. பெரும்பாலான பாலைவன விலங்குகள் இயல்பிலேயே இரவாடிகள் (இரவில் இரை தேடுபவை). பகலில் மணலில் குழிதோண்டி வசிப்பதால், வெப்பத்திலிருந்து தப்பிவிடுகின்றன.
6. பாலைவனங்களில் வானிலை ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு பாலைவனத்திலும் வேறுபட்ட வானிலையே காணப்படும். வெப்பமான, வறண்ட பாலைவனங்கள் ஆண்டு முழுவதும் சூடாகவும் கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்துடனும் காணப்படும். இங்கே மழை மிகவும் குறைவாகவே பொழிகிறது. சில நேரம் மழை தரையைக்கூடத் தொடுவதில்லை. விழும்போதே வெப்பத்தில் அவை ஆவியாகிவிடுகின்றன.
7. உலகின் மிகச்சிறிய பாலைவனம் கனடாவில் உள்ள யூகோன்.
8. உலகின் வறண்ட பாலைவனம் அடகாமா. விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, நான்கு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே மழை பொழியவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
9. பாலைவனங்கள் பலதரப்பட்டதாக இருக்கலாம். பாலைவனக் காலநிலையைக் கணிக்க முடியாது. வாழ்க்கை கடுமையாக இருந்தாலும் எல்லாப் பாலைவனங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில பாலைவனங்களில் சோலைகள், பாலூட்டிகள், உயரமான மலைகள் காணப்படுகின்றன.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago