இ. சஞ்சனா நித்ய ஸ்ரீ, 7-ம் வகுப்பு, நாராயணா இடெக்னோ பள்ளி, சோழிங்கநல்லூர், சென்னை.
இரவு வானில் மேகம் இல்லாத தெளிவான நாட்களில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறீர்களா? நட்சத்திரத்தின் பெயர், அது சார்ந்த விண்மீன் பற்றி யோசித்திருக்கிறீர்களா? எந்த நட்சத்திரம் எந்தத் திசையில் எப்போது வரும் என்று சொல்வதற்கு ஒரு வழிகாட்டி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா!
இதற்கு ஓர் எளிய வழி உள்ளது, அது ஸ்டெல்லாரியம் என்கிற செயலி. இந்தச் செயலியைக் கணினி, மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யலாம். stellarium.org மூலம் ஆன்லைனிலும் அணுகலாம்.
மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும் ஸ்டெல்லாரியம் செயலியில் உள்ள அம்சங்களைப் பார்க்கலாம்.
இந்தச் செயலியை playstoreஇல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலி தானாகவே உங்கள் இருப்பிடத்தைப் பதிவுசெய்து அதற்கேற்ப நட்சத்திரங்களின் நிலையைக் காண்பிக்கும். இந்தச் செயலியைத் திறந்து, தெளிவான இரவில் வானத்தை நோக்கிச் சுட்டிக் காட்டவும். ஒரு நட்சத்திரத்தின் மேலே போனைக் காட்டும்போது, நாம் பெயரைக் கண்டறியலாம். நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களில், ஒரு நட்சத்திரத்தை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அந்த நட்சத்திரம் இணைத்துள்ள விண்மீன்கூட்டத்தின் (constellations) வரைபடத்தைக்கூட நாம் பார்க்கலாம். நாம் ஒரு நட்சத்திரத்தின் மீது க்ளிக் செய்யும்போது அது பற்றிய சுருக்கமான தகவல்களைக் காண்பிக்கும். அந்த நட்சத்திரம் எந்த விண்மீனைச் சார்ந்தது, அது புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் (ஒளி ஆண்டுகள்) உள்ளது, அதன் வேறு பெயர்கள், அதைப் பற்றிய சிறுகுறிப்புகள் ஆகியவற்றை நாம் பார்க்க இயலும். அந்த நட்சத்திரம் குறிப்பிட்ட இரவில் எந்தப் பாதையில் செல்லும் என்பதையும் பார்க்கலாம்.
மேலும், நாள்காட்டியை க்ளிக் செய்வதன் மூலம் இன்றைய இரவில் நிலா, செவ்வாய், வியாழன் முதலியவை எந்த நேரத்தில் தோன்றும் என்பதைக் காண முடியும். இது மட்டும் அல்லாது இன்றைய இரவில் நாம் வெறும் கண்ணால் காணக்கூடிய செயற்கைக் கோள்கள், ராக்கெட் பாகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நேர அட்டவணைகளையும் காண இயலும். ஒவ்வொரு மாதத்திலும் நிகழக்கூடிய முதன்மையான வான் நிகழ்வுகளின் அட்டவணைகளையும் பெறலாம். அமாவாசை, முழு நிலவு, கிரகணம், விண் கற்கள் மழை, ஒன்றுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது, வால் நட்சத்திரங்கள் முதலிய நிகழ்வுகளின் அட்டவணையைப் பெற முடியும்.
நீங்கள் எந்த வான் பொருளையும் பெரிதாக்கிப் பார்க்கலாம். இதன் மூலம் நிலா, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள், அவற்றின் துணைக் கோள்களை ரசிக்கலாம். நிலவில் உள்ள முகடுகள், பிற விண்கற்கள் மோதியதால் உண்டான பள்ளங்கள், செவ்வாயின் செந்நிறம், அதில் உள்ள மலைமுகடுகள், அவற்றின் பெயர்கள் ஆகியவற்றை முப்பரிமாணக் கோணத்தில் (3D view) காணலாம். சனிக் கோளின் துருவம் அறுங்கோணத்தில் இருப்பதைக்கூடப் பார்க்கலாம். சனியின் நிலாக்களில் ஒன்றான நீர் நிறைந்த கடலால் ஆன enceladus அதன் முப்பரிமாண வடிவம், அதில் இருந்து பார்த்தால் தெரியும் சனியின் வளையங்கள் அற்புதமாக இருக்கும். செவ்வாயில் தரையிறங்கி இப்போது செயல் இழந்துள்ள ‘Opportunity’ இருக்கும் இடம்கூடக் குறிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக நட்சத்திரம் மற்றும் விண்மீன் கூட்டங்களின் பொதுப்பெயர் காட்டப்பட்டிருக்கும் . ஆனால், நாம் இந்தியாவில் அந்த நட்சத்திரங்களின் உள்ளூர் பெயரை அறிய ஸ்கை cultures மெனுவில் இந்தியப் பெயர்கள் என்று மாற்றிக்கொள்ளலாம்.
இது போக நாம் விண்மீன், நட்சத்திரம், கோள்கள், துணைக் கோள்களின் பெயரைத் தேடி, அவை வரும் கால அட்டவணையைப் பெற முடியும் .
இது மட்டும் அல்லாமல் நேற்று தென்பட்ட நட்சத்திரங்கள், நேற்றைய இரவு வானம் எப்படி இருந்தது, நாளை எப்படி இருக்கும் என்பதையும் காணலாம்.
மொத்தத்தில் இரவு வான் பற்றிப் படிப்போருக்கும், வானவியலில் ஆர்வமுடையோருக்கும் இந்தச் செயலி ஓர் அற்புதமான அனுபவத்தைத் தரும்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago