22 மே: சர் ஆர்தர் கோனன் டாயல்: துப்பறியும் கதைகளின் பிதாமகன்!

By செய்திப்பிரிவு

திலகா

புகழ்பெற்ற துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கியவர் யார் தெரியுமா? பிரபல ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாயல்தான்.

1859 மே 22 அன்று ஸ்காட்லாந்தில் பிறந்தார். மருத்துவம் பயின்றார். அப்போதுதான் அவருக்குத் துப்பறியும் துறையில் ஆர்வம் வந்தது. இரு சிறுகதைகளை எழுதினார். படிப்பை முடித்தவுடன் ஒரு கப்பலில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார். அப்போது கடல் பயணம் ஒத்துக்கொள்ளாததால் நோயுற்றார். இது போன்ற ஆபத்தான வேலையைச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார்.

திருமணத்துக்குப் பிறகு மனைவி லூயிஸா ஹாகின்ஸ், கோனன் டாயலை நாவல் எழுதச் சொன்னார். அவரின் யோசனையை ஏற்று, நாவல் ஒன்றை எழுதினார். ஆனால், அந்த நாவலை வெளியிட பதிப்பகங்கள் தயாராக இல்லை. 1887இல் ஷெர்லாக் ஹோம்ஸை வைத்து, முதல் துப்பறியும் சாகச நாவலை எழுதினார். இதுவும் பல்வேறு பதிப்பக நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ‘எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ நாவல் வெளிவந்து பிரமாதமான வரவேற்பைப் பெற்றது.

ஷெர்லாக் ஹோம்ஸ்

ஷெர்லாக் ஹோம்ஸை மட்டுமே வைத்து 4 நாவல்களையும் 56 சிறுகதைகளையும் கோனன் டாயல் எழுதியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஷெர்லாக் ஹோம்ஸால் தன்னுடைய தீவிரமான எழுத்துக்குப் பாதிப்பு உண்டாவதாகக் கருதினார். ஷெர்லாக் ஹோம்ஸ் மரணமடைந்துவிட்டதாக எழுதினார். பலரும் எதிர்க்கவே மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸை உயிர்ப்பித்தார்.
22 நாவல்கள், 204 சிறுகதைகள், 16 தொகுப்புகள், 4 கவிதை நூல்கள், 14 நாடகங்கள், 10 அபுனைவு நூல்கள், 13 ஆன்மிக நூல்களை எழுதியிருக்கிறார் கோனன் டாயல்!

போயர் போரில் பிரிட்டன் ஈடுபட்டதை நியாயப்படுத்தும் வகையில் ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதினார். அதற்காக அவர் மாவீரர் பட்டம் பெற்றார். போயர் போரிலும் முதல் உலகப் போரிலும் கோனன் டாயலின் மகன், சகோதரர், மருமகன்கள் இருவர் கொல்லப்பட்டனர். கோனன் டாயல் இரு முறை பாராளுமன்றத்துக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிற்கால வாழ்க்கையில் அவர் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.

1930 ஜூலை 7 ஆம் தேதி கோனன் டாயல் மாரடைப்பால் காலமானார். ஆனாலும், அவர் படைத்த ஷெர்லாக் ஹோம்ஸ், மோரியார்டி போன்ற கதாபாத்திரங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்