வாண்டு: ஹாய் பாண்டு, சுற்றுலா போய்ட்டு வந்ததுல இருந்து இன்னும் அதே நினைப்புல இருக்குற மாதிரி இருக்கே.
பாண்டு: ஆமா வாண்டு. திரும்பி விமானத்துல வர்றப்ப, கீழே இறங்கறப்ப காது வலிக்க ஆரம்பிச்சது. கீழே வந்தவுடனே வலி போய்டுச்சே. அதைப் பத்திதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீயே வந்துட்ட. அதுக்கு என்ன காரணம்னு உனக்குத் தெரியுமா?
வாண்டு: எனக்கும் காது வலிச்சதே. அதனால, வந்தவுடனே டாக்டர் அங்கிளுக்கு போன் போட்டு கேட்டேன்.
பாண்டு: ஓ... அப்படியா? என்ன சொன்னாரு?
வாண்டு: நமக்கு காதுன்னு பொதுவா இருந்தாலும், அதுக்குள்ள வெளிக் காது, நடுக் காது, உள் காதுன்னு நம்மோட காது அமைப்பு இருக்கு. நடுக் காதுல இருக்குற காற்றழுத்தமும், வெளிக் காது அப்படியில்லைன்னா வெளியில் இருக்குற காற்றழுத்தம் சமமா இருந்தா நமக்கு எந்தப் பிரச்சினையும் வராதாம். ஆனா, நமக்கு சளி பிடிச்சிருந்தாலோ தொண்டையில தொற்று இருந்தாலோ, நம்ம தொண்டையில இருக்குற யுஸ்டேஷியன் டியூப் அடைத்து கொள்ளும்.
பாண்டு: ஓ... சளி பிடிக்குறதுதான் வலி வரக் காரணமா?
வாண்டு: நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை. அதையும் சொல்லி முடிக்குறேன். விமானம் மேலே போகப் போக காற்றின் அழுத்தமும், அடர்த்தியும் குறைஞ்சுக்கிட்டே வரும். அதனால நடுக் காதுல அழுத்தம் அதிகமாகும். இந்த அதிகமான காற்று யுஸ்டேஷியன் டியூப் வழியாக தொண்டையிலிருந்து வெளியே போய்டும்.
நடுக் காதுல அழுத்தம் குறைவா இருக்குறதால வெளிக்காற்று யுஸ்டேஷியன் டியூப் வழியாக நடுக்காதோட அழுத்ததை சமப்படுத்த உள்ளே போக முயற்சிக்கும். ஆனா, வெளி அழுத்தம் அதிகமாக இருக்குறதால யுஸ்டேஷியன் டியூபைச் சுற்றியிருக்குற அழுத்தம் அதிகமா இருக்கும் .
அப்போ நடுக் காதோட காற்றழுத்தம், வெளியில் இருக்குற காற்றழுத்தத்தைவிடக் குறைவா இருக்குறதால, செவிப்பறையை வெளிக் காற்றழுத்தம் உள் நோக்கி அழுத்தும். அதனால்தான் விமானம் தரையிறங்கும்போது உயரம் குறைய குறைய செவிபறையில் வலி அதிகரிக்குது.
பாண்டு: அடடா, இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? உன்னால இதை நான் இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் விமானத்தைப் பத்தி பேசுறப்பதான் எனக்கு இன்னொரு விமான விஷயம் ஞாபகம் வந்துச்சு.
வாண்டு: அப்படி என்ன விஷயம் அது?
பாண்டு: உலகிலேயே பிரம்மாண்டமான விமானம் பற்றி. இது உக்ரைன் நாட்டுல இருக்கு. அந்த விமானத்தோட பேரு ‘ஆண்ட்னோவ் ஆன் - 225 ம்ரியா’
வாண்டு: எதை வைச்சு இது உலகின் பெரிய விமானம்னு சொல்ற?
பாண்டு: இந்த விமானத்தோட மொத்த எடை 600 டன்னாம். அதோட இறக்கை, போயிங் விமானத்தோட இறக்கையைவிட இரண்டு மடங்கு பெரிசு. விமானத்துல 42 டயர்கள் இருக்காம். இப்படி விமானத்தோட ஒவ்வொரு அம்சமும் ரொம்ப பெரிசா இருக்கு. அதனால உலகின் பிரம்மாண்ட விமானங்கள் பட்டியல்ல இதுக்கு இடம் கிடைச்சுருக்கு.
வாண்டு: நீ சொல்றப்பவே விமானத்தோட பிரம்மாண்டம் புரியுது பாண்டு. அப்புறம் ஒரு சின்னப் பையன் பழைய நகரத்தைக் கண்டுபிடிச்ச விஷயத்தைக் கேள்விப்பட்டியா?
பாண்டு: இல்லையே... என்ன நகரம்? யாரு அந்தச் சின்னப் பையன்?
வாண்டு: சொல்றேன். மெக்சிகோ நாட்டுல மாயன் காலத்து நகரை 15 வயசு பையன் கண்டுபிடிச்சுருக்கான்.
பாண்டு: மாயன் காலம் பற்றி ஸ்கூல் புத்துகத்துல படிச்சுருக்கேன். ரொம்ப பழைய நகரை எப்படிக் கண்டுபிடிச்சுனாம்?
வாண்டு: அதை சொல்லாம விடுவேனா. நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு. தென் அமெரிக்கா கண்டத்துல கி.மு. 1800-ம் ஆண்டிலிருந்து கி.பி. 900 ம் ஆண்டு வரைக்கும் மாயன் காலத்துல மக்கள் ரொம்ப நல்லா வாழ்ந்ததா சரித்திரங்களைச் சொல்லியிருக்காங்க.
குறிப்பா கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியிருக்காங்க. இவர்கள் பழங்குடி மக்கள். இந்த மக்களை கொன்றுவிட்டு அந்த இடத்துல ஐரோப்பியர்கள் குடியேறினாங்க. இது பழைய கதை.
பாண்டு: இன்னும் நீ விஷயத்துக்கே வரலையா?
வாண்டு: இதோ வந்துட்டேன்பா. மாயன் காலத்து மக்களோட நிறைய வாழ்விடங்களை ஏற்கெனவே நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. இப்போ மெக்சிகோவில் மத்திய பகுதியில யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டுக்குள்ள மாயன் காலத்து நகரம் ஒன்று இருப்பதை அந்தச் சிறுவன் கண்டு பிடிச்சிருக்கான். இந்தப் பையனோட பேரு வில்லியம் காதுரி. ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருக்கான். கனடாவுல கியூபெக் நகரத்துல வசிக்கிறான்.
பாண்டு: அதெல்லாம் சரி, எப்படிக் காட்டுக்குள்ள இருக்குற ஒரு பழங்காலத்து நகரை ஒரு சின்னப் பையனால கண்டுபிடிக்க முடிஞ்சது?
வாண்டு: மாயன் காலத்து வரலாற்றைப் படிச்ச பிறகு அந்தப் பழங்கால நகரை கண்டுபிடிக்கணும்னு அவனுக்கு ஆசை வந்துச்சு. அதுக்காகப் பண்டைய மெக்சிகோ மக்களின் வானியல் அட்டவணை, கூகுள் மேப், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தோட புகைப்படங்களை வைச்சு தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சுவந்தான்.
இந்தத் தொடர் முயற்சியில மாயன் காலத்து நகர கண்டுபிடிச்சுருக்கான். அந்த நகரத்துக்கு ‘லாஸ்ட் சிட்டி’ என்று பெயர் வைச்சுருக்கான். அதாவது தொலைந்த நகரம்ன்னு அர்த்தம்.
பாண்டு: அடேங்கப்பா, ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு. பெரிய சாதனைதான். சரிப்பா, நான் கடைக்குப் போகணும். வரட்டுமா?
வாண்டு: சரி, டாட்டா, பை பை..
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago