ஃபென்டாஸ்டிக் வாயேஜ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் மருத்துவர்கள் நுண்துகள் அளவுக்குச் சுருங்கி, சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் மனித மூளைக்குள் பயணம் செய்வார்கள். மூளையில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டைச் சரிசெய்வார்கள். இந்த அறிவியல் புனைகதையை நிஜமாக்கும் சாத்தியம் இருப்பதாக வருண் தர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனித உடலின் ரத்தக் குழாய்கள் வழியே சில நானோ துகள்களை ரோபாட் போலச் செலுத்த முடியும். நானோ துகள்கள் மீன்களைப் போல நீந்தி, நோய்க் கட்டி இருக்கும் பகுதிக்குச் செல்லும். கங்காரு வயிற்றில் குட்டி இருப்பது போல, நுண் ரோபாட் துகள்களுக்கு உள்ளே மருந்து இருக்கும். நோய்க் கட்டியை அடைந்ததும் அந்த மருந்தை நானோ துகள் ரோபாட் உமிழ்ந்துவிடும்.
ரோபாட் என்றதும் இயந்திர மனிதன் என்று கருதிவிட வேண்டாம். இவை கோள வடிவில் இருக்கும் பாலி கார்பன் நைட்ரேட் நுண்துகள்கள். இவற்றைத்தான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ரோபாட் நுண்துகள் எப்படி நீந்துகிறது? அதன் இயக்கத்துக்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? மிக நுணுக்கமாக இருப்பதால் அவற்றின் உள்ளே மின்கலம் போன்ற ஆற்றல் சேமிப்புக் கலத்தைப் பொருத்த முடியாது. ஒளிதான் நுண் துகள்களுக்கு ஆற்றல் தரும்.
ஒளிவழி வேதியியல் விளைவுத் தூண்டல் மூலம் இந்த நுண்துகள் ரோபாட் நீந்தும். ஒளியை நோக்கி நுண்துகள் ரோபாட் செல்லும் என்பதால் உடலின் குறிப்பிட்ட பகுதி நோக்கி நம்மால் ரோபாட் நுண்துகளைச் செலுத்த முடியும். தூய நீரில் ரோபாட் நுண்துகள்களை நீந்த வைப்பது எளிது. உப்பு கலந்த உடலின் நிணநீரில் நீந்த வைப்பது பெரும் சவால்.
இந்தச் சவாலை எதிர்கொண்டால் தான் உடலில் நீந்திச் செல்லும்படியான நுண்துகள் ரோபாட்களை உருவாக்க முடியும். எங்களது ஆய்வில் பாலி கார்பன் நைட்ரேட் நுண்துகள்கள் உப்புக் கரைசலில் நீந்தும் எனக் கண்டுபிடித்துள்ளோம் என்கிறார் வருண் தர்.
இவர்கள் கண்டுபிடித்த நுண்துகள் ரோபாட், உடல் திசுக்களுக்கு ஆபத்து விளைவிக்காது. எனவே, உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது. இதே நானோ துளைகளில் மருந்தை இட்டு நிரப்பி நானோ துகள் ரோபாட்டை இயக்கலாம் அவை நீந்தி உடலின் குறிப்பிட்ட இலக்கை அடைந்த பின்னர் ஒளியால் தூண்டி, மருந்தை வெளிவர வைக்கவும் முடியும் என்கிறார்கள்.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago