காட்டுக்குள் ஒரு ஜிக்குபுக்கு...!

By எஸ். சுஜாதா

மனிதர்கள் வசிக்காத மரங்கள் அடர்ந்த காடு, ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி. இவற்றுக்கு மத்தியில் அட்டகாசமாக இருக்கிறது மார்டினி ரயில்வே ஜங்ஷன். ஆளே இல்லாத இடத்தில் எதற்கு ஒரு ரயில் நிலையம்?

இது நிஜ ரயில் நிலையம் அல்ல. பொம்மை ரயில் நிலையம். 120 அடி நீளத்துக்கு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு பொம்மை ரயில் ஊர்ந்து போகிறது. ரயிலுக்குள் பொம்மைப் பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்ஜின் பகுதியில் அமர்ந்து ஒருவர் ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ரயில் ஆங்காங்கே பல நிறுத்தங்களில் நிற்கிறது. பாலங்களைக் கடக்கிறது. சுரங்கங்களுக்குள் சென்று வருகிறது. உயரமான இடத்தில் ஏறுகிறது, பள்ளமான இடத்தில் இறங்குகிறது. தண்டவாளத்துக்குப் பக்கவாட்டில் விளக்குக் கம்பங்கள் இருக்கின்றன.

ரயில் நிலையங்களில் மனிதர்கள் மட்டுமல்ல, நீர்யானை, பெங்குவின், பன்றி, டைனசர் போன்ற விலங்குகளும் பறவைகளும்கூட ரயிலுக்காகக் காத்திருக்கின்றன! ஆங்காங்கே பெஞ்சுகளும் வாகனங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையத்தில் ஓர் அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு கடிகாரம் நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மரங்களில் தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாலத்தில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பாலத்தில் காண்டாமிருகத்தோடு சேர்ந்து ஒரு மனிதர் நிற்கிறார்.

ரயில் நிலையங்களில் மனிதர்கள் மட்டுமல்ல, நீர்யானை, பெங்குவின், பன்றி, டைனசர் போன்ற விலங்குகளும் பறவைகளும்கூட ரயிலுக்காகக் காத்திருக்கின்றன! ஆங்காங்கே பெஞ்சுகளும் வாகனங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையத்தில் ஓர் அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு கடிகாரம் நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மரங்களில் தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாலத்தில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பாலத்தில் காண்டாமிருகத்தோடு சேர்ந்து ஒரு மனிதர் நிற்கிறார்.

உண்மையான ரயில் நிலையத்தை நினைவுபடுத்தும் இவை எல்லாமே அந்த அழகான மினியேச்சர் மார்டினி ஜங்ஷனில் உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நீதம் காட்டுப் பகுதிக்குள்தான் இந்த பொம்மை ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

யார், எதற்காக இந்தக் காட்டுக்குள் இப்படி ஒரு ரயில் நிலையத்தை உருவாக்கியது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

ஜிம் மெட்காஃப் என்ற இன்ஜினியர் பொழுது போக்குவதற்காக இந்தக் காட்டுக்கு அடிக்கடி வருவார். இங்கே சலசலத்து ஓடும் ஓடைக்கு அருகில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். அந்தத் தண்ணீரைத் தடுத்து, தானே ஓர் அருவியை உருவாக்கினார். அந்த அருவியை அமர்ந்து ரசிப்பதற்காக இரண்டு பெஞ்சுகளைப் போட்டு வைத்தார். தன் மனைவியுடன் அடிக்கடி வந்து செல்வார்.

ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அவரது மகள், கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி பொம்மை ரயிலை வைத்து அலங்காரம் செய்திருந்தாள். அதைப் பார்த்தவுடன் நீதம் காட்டில் ஒரு பொம்மை ரயில் நிலையத்தை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. ஒவ்வொன்றையும் தானே வடிவமைத்தார். 12 ஆண்டுகளுக்கு முன் மார்டினி ரயில் நிலையம் முழுமையடைந்தது.

ஜிம் மெட்காஃப் வரும் நாட்களில் மட்டுமே இந்த ரயில் இயங்கும். மற்ற நேரங்களில் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டுச் செல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக மார்டினி ரயில் நிலையம் வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான பெரியவர்களும் குழந்தைகளும் இந்த இடத்தைத் தேடி வந்தனர். இந்த மினியேச்சர் ரயில் நிலையம் பிடித்துப் போனதால் குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த பொம்மைகளை ஆங்காங்கே வைத்துவிட்டுப் போனார்கள்.

அதனால்தான் மனித பொம்மைகளுக்கு நடுவே நீர்யானை, பெங்குவின், டைனசர் போன்றவையும் ரயிலுக்காகக் காத்திருக்கின்றன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்