வாண்டு: என்னா வெயிலு, என்னா வெயிலு?
பாண்டு: ஏய் வாண்டு, என்ன ஏதோ புலம்பிட்டு வர மாதிரி இருக்கு.
வாண்டு: அடிக்குற வெயில்ல வெளியக்கூட வர முடியலை. தண்ணீர் தாகமும் அடங்க மாட்டேங்குது. வீட்டுல இருக்குற பிரிட்ஜூக்குள்ள உட்கார்ந்துலாம்ணு தோணுது.
பாண்டு: ஆமா, நீ சொல்றது கரெக்ட்டுதான். வெயிலைச் சமாளிக்க இந்த வாரம் எங்களை ஊட்டி, கொடைக்கானலுக்குக் கூட்டிட்டுப் போறதா எங்கப்பா சொல்லியிருக்காரு.
வாண்டு: ம்… ஊட்டி, கொடைக்கானலா? ரொம்ப ஜாலியா இருக்குமே. வெயில் தெரியாத அளவுக்கு ரொம்ப ஜில்லுன்னு இருக்குமே.
பாண்டு: ஆமாமா, எனக்கு அதுல ஒரு டவுட்டுப்பா.
வாண்டு: ஊட்டி, கொடைக்கானல் போறதுல என்ன டவுட்டு உனக்கு?
பாண்டு: நம்ம ஊர்ல வெயில் கொளுத்துது. அங்க மட்டும் எப்படி ஜில்லுனு இருக்கு? எங்கப்பாகிட்டே கேட்டா, மலை மேலே அப்படித்தான் இருக்கும்ணு சொன்னாரு.
வாண்டு: அங்கிள் சொன்னது சரிதான். ஆனால், அதிலும் ஒரு அறிவியல் இருக்குண்ணு எங்க டீச்சர் ஏற்கெனவே சொல்லியிருக்காங்க?
பாண்டு: என்ன சொன்னாங்கன்னு எனக்கு சொல்லுபா.
வாண்டு: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள் குளுமையா இருக்க காற்றழுத்தமும், வெப்ப நிலையும்தான் காரணம். கடல் மட்டத்திலிருந்து மலையில் ஏறிப் போகப் போகக் காற்றின் அழுத்தம் குறைந்துகொண்டே வரும். காற்றோட அழுத்தம் குறையுறப்ப வெப்ப நிலையும் குறைஞ்சுக்கிட்டே வரும். அதனாலதான் மலைப் பிரதேசங்கள்ல வெப்ப நிலை குறைஞ்சு ஜில்லுனு இருக்கு.
பாண்டு: கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. சூரியன் வானத்து மேலே இருக்கு. நாம கீழே இருக்கோம். நாம் மலை மேலே ஏறிப் போறப்ப சூரியனை நோக்கிதானே போறோம். அப்படின்னா போகப்போக வெப்பம் அதிகமாத்தானே இருக்கும். அப்புறம் எப்படிக் குறையுது?
வாண்டு: இதே டவுட்டை நானும் டீச்சர் கிட்டே கேட்டேனே. அதற்கு அவுங்க பதில் சொன்னாங்க. அதாவது நம்மள சுற்றி இருக்குற காற்று நிறைய துகள்களோட இருக்கும். இந்தத் துகள்கள் எல்லாம் அசைஞ்சு ஒண்ணோடு ஒண்ணு உரசி, மோதி வேலை செய்யுறதாலலதான் வெப்பம் ஏற்படுது. இந்தத் துகள்கள் ஒன்றோடுடொன்று உரசி வேகம் அதிகரிக்குறப்ப வெப்ப நிலையும் கூடுது. காற்றோட அழுத்தத்தைப் பொறுத்துதான் இந்தத் துகள்களோட வேகமும் அதிகரிக்கது. அழுத்தம் கூடுறப்ப துகள்களின் வேகமும் கூடி, வெப்ப நிலையும் கூடுது. மலைப் பிரதேசங்களில் காற்றழுத்தம் எப்பவுமே குறைவாத்தான் இருக்கும். காற்றோட அழுத்தம் குறைவா இருக்குறதால துகள்களோட வேகம் குறைஞ்சு வெப்ப நிலையும் குறைவாகவே இருக்கு. அதோட மலைப் பிரதேசங்களில் மரங்களும் அதிகமா இருக்குறதால குறைவான வெப்ப நிலையும் அடர் மரங்களும் சேர்ந்து ஜில்லுத் தன்மையை அதிகரிக்கின்றன.
பாண்டு: இதுல இவ்வளவு அறிவியல் இருக்கா? இதை எங்கப்பா கிட்ட சொன்னா என்னைப் பாராட்டுவாரு. ரொம்ப நன்றி.
வாண்டு: இதுக்கெல்லாம் நன்றி எதுக்குபா? அப்புறம், வேற என்ன தகவல் வைச்சுருக்க பாண்டு?
பாண்டு: ஒரு நாய்க்குட்டி தகவல் என்கிட்ட இருக்கு. அதைச் சொல்றேன். ஜப்பானைச் சேர்ந்த ப்யூரின்னு ஒரு நாய்க்குட்டி கோல் கீப்பரா நின்று ஒரு நிமிஷத்துல 14 பந்துகளைப் புடிச்சது பத்தி போன வருஷம் பேசுனோமே, ஞாபகம் இருக்கா?
வாண்டு: இருக்கே பாண்டு. கின்னஸ் சாதனை படைச்சதுன்னு சொன்னியே அந்த நாய்க்குட்டிதானே?
பாண்டு: கரெக்ட். அதே நாய்க்குட்டிதான். அந்த நாய்க்குட்டி இப்போ புதுசா இன்னொரு சாதனைப் படைச்சுருக்கு.
வாண்டு: ஓ... அப்படியா? அது என்ன சாதனை?
பாண்டு: இந்த முறை அந்த நாய்க்குட்டி ஒரு பெரிய பந்து மேலே நின்னுக்கிட்டு, 11.90 விநாடில 10 மீட்டர் உருட்டிக்கிட்டே பயணம் செஞ்சுருக்கு. இதுவும் புதிய கின்னஸ் சாதனை ஆயிடுச்சு. அடுத்தடுத்த வருஷத்துல சாதனை செஞ்சதால ஜப்பான்ல இந்த நாய்க்குட்டி ரொம்ப பிரபலமாயிடுச்சு. அடுத்து என்ன சாதனை செய்யும்ணு பேசுற அளவுக்கு ப்யூரின் நாய்க்குட்டியைப் பற்றி எதிர்பார்ப்பும் அதிகமாயிடுச்சு.
வாண்டு: கின்னஸ்ல மனிதர்களே எதை வேண்டுமானாலும் சாதனையா செய்ய முடியும். விலங்குகளுக்குச் சொல்லவா வேண்டும்? சரி பாண்டு ஊட்டி, கொடைக்கானலுக்குப் போயிட்டு வரப்ப நிறைய பிளம்ஸ், பேரிக்காய், கோகோ சாக்லெட்டெல்லாம் வாங்கிட்டு வரீயா?
பாண்டு: நிச்சயமா வாண்டு. உனக்கு வாங்கிட்டு வராம இருப்பேனா?
வாண்டு: சரி, பார்த்து போய்ட்டு வா, டாட்டா..., பைபை...!
பாண்டு: டாட்டா...!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago