பாம்புக்கு நாக்குதான் மூக்கு

By ஷங்கர்

#பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள்.

#பாம்புகள் மாமிச உண்ணிகள். மனிதனின் மூதாதையர்களாகக் குரங்குகள் கருதப்படுவதைப் போல பாம்புகளுக்கு மூதாதையர் பல்லிகள் என்று கருதப்படுகின்றன.

#பாம்புகளுக்குப் பற்கள் கிடையாது. அதனால் இரையை அப்படியே முழுமையாக விழுங்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி பாம்புகளின் கபாலத்தில் பலவகை இணைப்புகள் இருக்கும். ஏனெனில் தனது தலையை விடப் பெரிய உயிர்களைத் தின்பதற்கும், வேகமாக விழுங்குவதற்கும் தசைகள் தேவை.

#பாம்புகள் ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருப்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் பக்கவாட்டில் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருக்கும்.

#பாம்புகளுக்குக் கால்கள் கிடையாது. ஆனாலும் உடலால் நிலத்தில் ஊர்ந்து வேகமாக நகரும். சில பாம்புகள் நீரிலும் வேகமாக நீந்தும்.

#உலகம் முழுவதும் 3,400க்கும் அதிகமான பாம்பினங்கள் உள்ளன.

#பாம்புகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நச்சுப் பாம்புகள் உள்ளன. இந்தியாவில் நல்ல பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நச்சுப் பாம்பு வகையில் சேரும்.

#பாம்புகளுக்குக் கண் இமைகள் கிடையாது

#அண்டார்டிகா கண்டத்தைத் தவிர உலகின் சகல பகுதிகளிலும் பாம்புகள் உள்ளன.

#பாம்பின் தோல் மென்மையாகவும் உலர்வாகவும் இருக்கும். அது சட்டை என்று அழைக்கப்படுகிறது.

#பாம்பு தனது தோல் சட்டையை ஆண்டுக்குப் பல முறை உரிக்கும்.

#பாம்பு தனது நாக்கின் மூலம் வாசனையை அறிகிறது.

#பாம்புகளிலேயே பெரிய அளவில் உள்ளவை மலைப்பாம்புகள்தான். 28 அடிவரை வளரக்கூடியவை. அனகொண்டாக்களும் நீளமானவை. 16 அடி நீளம். இவை விஷம் அற்றவை. தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

#உலகிலேயே சிறிய அளவில் உள்ள பாம்பு, பார்படா த்ரெட் ஸ்நேக் எனப்படும் பாம்புதான். 10 சென்டிமீட்டர் அளவே இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்