வாண்டு: ஏய் பாண்டு, சாயங்கலாம் ஆச்சுனா எங்கேயும் உன்னைப் பார்க்க முடியலையே. எங்க போயிடுற?
பாண்டு: எங்கேயும் போகலைபா. உலகக் கோப்பைகிரிக்கெட் நடக்குதுல. ராமு வீட்டுக்கு கிரிக்கெட் பார்க்கப் போயிடுறேன்.
வாண்டு: உங்க ரெண்டு பேருக்கும் கிரிக்கெட்னா போதுமே… அதுல ஒண்ணா வேற சேர்ந்து மேட்ச் பார்க்குறீங்களா?
பாண்டு: எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேட்குற பார்த்தியா?
வாண்டு: கிரிக்கெட் மேட்ச் மாதிரி, பிரேசில்ல தெருவோரக் குழந்தைகளுக்கு நடந்த மினி ஒலிம்பிக் போட்டியைப் பத்தி நீ கேள்விப்பட்டியா பாண்டு?
பாண்டு: இல்லையேப்பா, குழந்தை களுக்குக்கூட ஒலிம்பிக் போட்டி நடத்துறாங்களா?
வாண்டு: எப்பவும் கிரிக்கெட் பத்தி மட்டுமே பேசினா, மற்ற விளையாட்டுகள எப்படி தெரிஞ்சுக்குவ? இது உன்னை, என்னை மாதிரியான குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில்லை. வீடு, வாசல் இல்லாம தெருவோரங்கள்ல குடியிருக்காங்களே, அதுமாதிரியானவங்களோட குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டி.
பாண்டு: ரொம்ப வித்தியாசமான போட்டியா இருக்கும் போலிருக்கே?
வாண்டு: உண்மையிலேயே வித்தியாசமான போட்டிதாம்பா. இப்போதான் முதல் முறையா நடத்துறாங்க. லண்டனைச் சேர்ந்த ‘ஸ்டீட்ரீட் சைல்ட் யுனைடெட்’ன்னு ஒரு அமைப்புதான் இந்தப் போட்டியை நடத்துனாங்க. இதுல அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பிரேசில்னு 14 நாடுகள்லேர்ந்து குழந்தைகள் கலந்துகிட்டாங்களாம்.
பாண்டு: இந்தியாவுலேர்ந்து குழந்தைகள் யாரும் கலந்துக்கலையா?
வாண்டு: கலந்துக்கலையாவா? கலந்துக்கிட்டு நிறைய மெடல்களையும் வாங்கியிருக்காங்க. அதுவும் நம்ம சென்னையைச் சேர்ந்த ஒரு அக்கா பிரேசிலை கலக்கியிருக்காங்கப்பா பாண்டு.
பாண்டு: அப்படியா? அவுங்க யாரு? எதுல ஜெயிச்சாங்க?
வாண்டு: சொல்றேன் பாண்டு. அந்த அக்கா பேரு ஹெப்சிபா. பதினோராம் வகுப்புல படிக்கிறாங்க. சென்னையில சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல தெருவோரமா முன்பு இருந்திருக்காங்க. இப்போ வீடு இல்லாதவர்களுக்கான ஒரு இல்லத்துல இருக்காங்களாம். இவுங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தயலத்துல தங்கப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்துல வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்துல வெண்கலப் பதக்கம்னு 4 பதக்கங்கள் வாங்கினாங்களாம்பா.
பாண்டு: வேறு யாரும் பதக்கம் வாங்கலையா வாண்டு?
வாண்டு: சின்ன வயசுல தருமபுரியிலேர்ந்து வீட்டை விட்டு சென்னைக்கு வந்துட்ட அசோக்னு ஒரு அண்ணா, குண்டு எறிதல் போட்டியில வெண்கலப் பதக்கம் வாங்கியிருக்காராம்பா. இவுங்கள மாதிரி சென்னையில தெருவோரங்கள்ல வசிக்கிற உஷா, சிலம்பரசன், சினேகான்னு இன்னும் 3 பேரும் கலந்துக்கிட்டாங்களாம்.
பாண்டு: அதெல்லாம் சரி, தெருவோரமா நிறைய பேரு இருக்காங்க. இவுங்களை யாரு கூட்டிட்டு போனா?
வாண்டு: சென்னையில இருக்குற ‘கருணாலயா’ன்ற ஒரு தொண்டு நிறுவனம் மூலமாதான் இவுங்க பிரேசிலுக்குப் போயிருக்காங்க.
பாண்டு: தெருவோரமா வசிக்கிற இவுங்களுக்கு இனிமேலாவது நல்லது நடந்தால் சரிதான் வாண்டு.
வாண்டு: ஆமா பாண்டு. கரெக்டா சொன்ன.
பாண்டு: அப்புறம், ஸ்கூல்ல ஆக்டோபஸ் பத்தி பாடம் எடுத்தாங்கன்னு அன்னைக்கு என்கிட்ட சொன்னல்ல. அதைப் பத்தி நிறைய விஷயங்கள்கூட சொன்னியேப்பா. இப்போ புதுசா ஒரு ஆக்டோபஸ் கண்டுபிடிச்சிருக்கறதா ஒரு பேப்பர்ல படிச்சேன் வாண்டு.
வாண்டு: ஹை.. நிஜமாவா? எங்க கண்டுபிடிச்சாங்களாம்?
பாண்டு: அமெரிக்கா பக்கத்துல ஹவாய் தீவு இருக்கில்ல. அங்கேதான் ஆக்டோபஸைக் கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. இது ரொம்ப புதுமையான ஆக்டோபஸாம்.
வாண்டு: அப்படி என்ன புதுமை அதுல இருக்கு பாண்டு?
பாண்டு: வழக்கமா ஆக்டோபஸ் நண்டு மாதிரி கலர், சிவப்பு கலர்ல்ல இருக்குமில்லையா? ஆனா, இது பளிச்சுன்னு வெள்ளையா இருக்குப்பா. இது ஒளிபுகும் வடிவிலான தோற்றத்துல இருக்காம். இந்தப் புதுமையான ஆக்டோபஸுக்கு அமெரிக்காவோட வித்தியாசமான கார்ட்டூன் பாத்திரமான ‘காஸ்பர்’ன்ற பேரை வைச்சுருக்காங்க. இதைப் பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணப்போறாங்களாம். அதுக்கப்புறம் இதைப்பத்தி நிறைய விஷயங்கள் தெரிய வரும்னு சொல்லியிருக்காங்க வாண்டு.
வாண்டு: நீ சொல்றப்பவே அதைப் பார்க்கணும் போல இருக்கே. அப்பா வந்தவுடனேயே கம்ப்யூட்டர்ல அந்த ஆக்டோபஸை பார்க்குறேன். சரி பாண்டு, இப்போ நான் போகட்டுமா?
பாண்டு: சரி வாண்டு, டாட்டா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago