மேஜிக்... மேஜிக்... - கண்ணாடிக் குவளைக்குள் நுழையும் காசு

By க.ஸ்வேதா

ஹாலோ குழந்தைகளே, இந்த வாரம் உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த காசை வைத்து செய்யும் மேஜிக் வித்தையைச் செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை:

கண்ணாடிக் குவளை, காசு.

மேஜிக் செய்வது எப்படி?

# ஒரு கண்ணாடிக் குவளையைக் கையில் பிடித்து, எல்லோருக்கும் காட்டுங்கள்.

# இன்னொரு கையில், காசைக் குவளைக்கு அடியில் பிடியுங்கள்.

# கண்ணாடித் திடமாகத்தான் இருக்கிறது என்று காட்ட, உங்கள் நண்பர்களிடம் குவளையைக் கொடுத்து அதை காசால் சில முறை தட்டச் சொல்லுங்கள்.

# இப்போது குவளையை வாங்கி, கண்களை மூடிக்கொண்டு ஓம்..கிரீம்... என மந்திரம் சொல்லிபடி, குவளைக்கு அடியில் மூன்று முறை தட்டுங்கள்.

# என்னே மாயம், காசு குவளைக்குள் சென்றுவிட்டது.

மேஜிக் ரகசியம்

காசால் குவளைக்கு அடியில் இரண்டாவது முறை தட்டும்போது கையில் உள்ள காசை யாருக்கும் தெரியாமல் விரலுக்கு கொண்டு வர வேண்டும். மூன்றாவது முறை தட்டும்போது, காசை குவளையைப் பிடித்திருக்கும் கை வழியாகத் தந்திரமாக யாருக்கும் தெரியாமல் கண்ணாடிக் குவளைக்குள் விழவைக்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அப்போதுதான் பார்ப்பவர்களுக்கு காசு குவளைக்குள் போய் விழுவது போலத் தெரியும்.

இந்த வித்தையை ஒரே முறையில் செய்ய முடியாது. பல முறை நன்கு பயிற்சி செய்து பார்த்த பிறகே மற்றவர்களுக்கு செய்து காட்டுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்