வாண்டு பாண்டு: பழம் நிறைய தண்ணீர்!

By மிது கார்த்தி

பாண்டு: ஹலோ வாண்டு, குட் மார்னிங்

வாண்டு: ஹேய் பாண்டு, வர வர ஸ்கூலுக்குப் போறப்பதான் நாம ரெண்டு பேரும் பார்க்கவே முடியுது.

பாண்டு: ஆமா வாண்டு, லீவு நாள்ல வெயில்ல விளையாடப் போகக் கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்கண்ணு போன வாரம்தான் சொன்னேன்.

வாண்டு: நீ சொன்னது ஞாபகம் இருக்கு. நானும் இப்போல்லாம் வெயில்ல விளையாடுறதில்ல. வெயில் அதிகமா இருக்குறதால, ஸ்கூலுக்குப் போறப்ப தினமும் எனக்கு எங்கம்மா ஜூஸ் கொடுத்து அனுப்புறாங்கன்னா பார்த்துக்கோ.

பாண்டு: ஓ... ஜூஸ்கூடக் கொடுத்து அனுப்புறாங்களா? சரி, இன்னைக்கு என்ன ஜூஸ்?

வாண்டு: தர்ப்பூசணி ஜூஸ் கொடுத்துருக்காங்க.

பாண்டு: தர்ப்பூசணி ஜூஸா? தர்ப்பூசணியை யாராவது ஜூஸா குடிப்பாங்களா?

வாண்டு: ஏன் பாண்டு ஜூஸா குடிக்கக் கூடாதா?

பாண்டு: பொதுவா எந்தப் பழத்தையும் ஜூஸா சாப்பிடுறதைவிட பழமா அப்படியே சாப்பிடுறதுதான் நல்லதுன்னு எங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற டாக்டர் அங்கிள் அடிக்கடி சொல்லுவாரு. பழங்களை நசுக்குறப்ப அதுல இருக்குற இயற்கையான சக்தி குறைஞ்சி போயிடுமாம். அப்புறம் அதுல சர்க்கரையைப் போட்டுதானே ஜூஸ் செய்வாங்க. அதனால பழத்தோட முழுப் பயனும் நமக்குக் கிடைக்காம போகலாம்னு சொல்லுவாரு.

வாண்டு: மற்ற பழங்களுக்கு நீ சொல்றது ஓ.கே.தான். தர்ப்பூசணியை ஜூஸ் செஞ்சி சாப்பிடுறதுல என்ன தப்பு?

பாண்டு: வாண்டு, தர்ப்பூசணி பழம் பூரா தண்ணீர்தான் அதிகமா இருக்கு. இந்தப் பழத்துல கிட்டத்தட்ட 92 சதவீதம் தண்ணீர் நிறைஞ்சிக் கிடக்கு. அதனால இதைப் பழமா அப்படியே சாப்பிடுறதுதானே நல்லது.

வாண்டு: ஓ... ஆமால்ல. தர்ப்பூசணியில 92 சதவீதம் தண்ணீ இருக்குன்னா மற்ற சக்தி இதுல எதுவுமே இருக்காதா பாண்டு?

பாண்டு: ஏன் இல்லை, இந்தப் பழத்துல ‘சிட்ரூலின்’ன்னு சத்துப்பொருளும் அதிகமா இருக்கு. அப்புறம் நார்ச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், தாது உப்புகள்கூட இருக்கு. வைட்டமின் பி, சி, நியாசின் சத்தும் இதுல இருக்கு.

வாண்டு: அப்பப்பா... தர்ப்பூசணி பழத்தைப் பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கியே. இந்தப் பழத்தை எங்க ஊர்ல கோசாப்பழம்னு சொல்லுவாங்க. அப்புறம் எப்படி இந்தப் பழத்துக்குத் தர்ப்பூசணின்னு பேரு வந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா?

பாண்டு: வாண்டு, தமிழ்ல்ல இந்தப் பழத்தைக் கோசாப்பழம்னு மட்டுமல்ல, நீர்ப்பூசணின்னுகூட சொல்வாங்க. இப்படி சில பேரு இருந்தாலும் தர்ப்பூசணின்ற பேருதான் இதுக்கு நிலைச்சுடுச்சி. தரையோடு சேர்ந்து வளர்றதால தரைப்பூசணிப்பழம்னு இதை சொல்லியிருக்காங்க. அதுவே பின்னாடி தர்ப்பூசணின்னு மாறியிருக்கலாம்.

வாண்டு: அப்படியா? தர்ப்பூசணி ஜூஸ் கொண்டுவந்ததால, அந்தப் பழத்தைப் பத்தி இன்னைக்கு நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நீ சொன்ன மாதிரி இனிமே எல்லாப் பழத்தையும் அப்படியே நான் சாப்பிடப் போறேன்.

பாண்டு: ரொம்ப நல்லது.

வாண்டு: பாண்டு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல ஒரு குட்டிப் பையன் கால்பந்து வீரர் மெஸ்ஸி போடுற சட்டை மாதிரியே பிளாஸ்டிக் பையில சட்டையை போட்டுட்டு விளையாடுறான்னு பேசிக்கிட்டோமே, அது ஞாபகம் இருக்கா?

பாண்டு: ஆமா, ஞாபகம் இருக்கே. அந்தப் பையன் பேருகூட முர்தாஸா அகமதிதானே. ரொம்ப ஏழையா இருக்குறதனால அவனால சட்டை வாங்க முடியாம கால்பந்து வீரர் மெஸ்ஸி போல பிளாஸ்டிக் சட்டை செஞ்சிப் போட்டுக்கிட்டான்னுதானே பேசிக்கிட்டோம்.

வாண்டு: இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மெஸ்ஸிகூட அந்தக் குட்டிப் பையனைப் பார்க்கப் போறதா சொல்லியிருந்தாரே, அது ஞாபகம் இருக்கா?

பாண்டு: இருக்கு வாண்டு. அந்தக் குட்டிப் பையனை மெஸ்ஸி வந்து பார்த்துட்டாரா?

வாண்டு: ம்ஹூம்... இன்னும் வந்து பாக்கல. ஆனா, மெஸ்ஸிகிட்ட இருந்த அந்தப் பையனுக்கு ஒரு பரிசு வந்திருக்கு.

பாண்டு: என்ன பரிசு வாண்டு?

வாண்டு: மெஸ்ஸியோட ஜெர்சி (சட்டை) பரிசா வந்திருக்கு. அவரு எப்பவும் போடுற ஜெர்சியில ‘மெஸ்ஸி 10’ன்னு போட்டு அதுல கையெழுத்தும் போட்டு அனுப்பி வைச்சுருக்காரு.

பாண்டு: அப்போ அந்தச் சட்டை முர்தாஸாவுக்கு எதிர்பார்க்காத பரிசா இருக்கும்னு சொல்லு.

வாண்டு: ஆமா பாண்டு. இப்போ அந்தச் சட்டையைப் போட்டுக்கிட்டுதான் முர்தாஸா கால்பந்து விளையாடப் போறானாம்.

பாண்டு: சொன்னதோட இல்லாம, ஞாபகமா அந்தக் குட்டிப் பையனுக்கு பரிசையும் அனுப்பி வைச்ச மெஸ்ஸியைத்தான் நாம பாராட்டணும்.

வாண்டு: ஆமா. சரிசரி, பேசிட்டு வந்ததுல ஸ்கூல் வந்ததே தெரியலை. டாட்டா பாண்டு.

பாண்டு: ம்…பை...பை... வாண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்