ஒலிம்பிக் - உலகம்: 10 வயது ஒலிம்பிக் வீரர்!

By மிது கார்த்தி

# ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்படும் ஐந்து வளையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஓசியானியா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.

# தொடக்கக் காலத்தில் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவோருக்குப் பதக்கங்கள் வழங்கப்படவில்லை. ஆலிவ் இலைகளால் ஆன கிரீடமே வழங்கப்பட்டது.

# ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை.

# ஒலிம்பிக்கில் மிகக் குறைந்த வயதில் பங்கேற்றவர் கிரேக்கத்தைத் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியோஸ் லோண்ட்ரஸ் (dimitrios loundras). 1896 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் போது இவருக்குப் பத்து வயதுதான்.

# முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

# மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஒரே நகரம் லண்டன். 1908, 1948, 2012 ஆகிய ஆண்டுகளில் இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.

# உலகிலேயே அதிக ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற நாடு அமெரிக்கா. 1,127 தங்கம், 907 வெள்ளி, 794 வெண்கலம் என இதுவரை 2,828 பதக்கங்களை வென்றுள்ளது.

# ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களைப் வென்றவர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இதுவரை 23 தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என 28 பதக்கங்களை வென்றுள்ளார்.

# பாராலிம்பிக் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் ஒலிம்பிக். போரால் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்காக முதன் முதலில் 1948ஆம் ஆண்டில் இது நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டி தொடங்கும் அதே நகரில் பாராலிம்பிக் போட்டியும் தொடங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்