கலைடாஸ்கோப்: காட்டைக் காக்கும் குட்டி மனிதர்கள்

By டி. கார்த்திக்

மேரி கேத்தரினுக்கு அவுங்க அப்பாவ பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஏன்னா, அவுங்க அப்பா வீட்டுக்கே வராம எப்போதும் ஆராய்ச்சியே கதின்னு இருப்பாரு. அவுரு பேரு போம்பா. அவரு காடுகள பாதுகாக்கும் ‘லீப் மேன்’கிற பாதுகாவலர்கள கண்டறியும் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கிறாரு.

இந்த ‘லீப்மேன்’ யாருன்னா ரொம்ப ரொம்ப குட்டி மனிதர்கள். கண்ணுக்கே தெரிய மாட்டார்கள். லென்ஸ் வைத்துப் பார்த்தால் குட்டியா தெரிவார்கள். இவுங்களால் நம்மை போல வேகமாக ஓட முடியாது. கையில் வில்லும் அம்பும் வைச்சிருப்பாங்க. அவுங்கள தேன் சிட்டுக் குருவிகள் சுமந்து போகும். இப்படி ஒரு அபூர்வமான லீப்மேன்களை கண்டுபிடிப்பதிலதான் மேரியோட அப்பா போம்பா நேரத்தை செலவு செஞ்சிட்டு இருந்தாரு.

தன்னைப் பத்தி அப்பா எதுவுமே நினைக்கிறதில்லையேன்னு மேரிக்கு அவுங்க அப்பா மேலே கோபம். இதனால வீட்டை விட்டு எங்காவது போய்டலாம்னு அவ முடிவு செய்யுறா. அப்படி போறப்ப காட்டு ராணி தாராவை அவ எதிர்பாராத விதமா பார்க்கிறா. இவ யாருன்னா, மேரியோட அப்பா யாரை கண்டுபிடிக்கணும்னு வெறியா அலைஞ்சுக்கிட்டு இருக்காரோ, அவுங்கள்ள ஒருத்தி. காட்டை பாதுகாக்கிறதுதான் எங்களோட வேலைன்னு மேரிகிட்ட சொல்றா. அப்பவே ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ஆயிடுறாங்க.

ஒரு சமயத்தில காட்டை பாதுகாக்குற வேலையில தாரா செத்துப் போறா. அப்போ தன்கிட்ட உள்ள சக்திகள ஒண்ணு சேர்த்து ஒரு மலர் மொட்டை மேரிகிட்ட தரா. அதை குறிப்பிட்ட நேரத்துக்குள்ள, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேரிய கொண்டு போக சொல்றா. அது மட்டுமில்ல, தாரா செத்துப்போறப்ப தன்னை மாதிரியே குட்டி மனுஷியா மேரிய மாத்திடுறா.

புதிய உலகிற்குள் மேரி போறப்ப பல அதிசயங்களைப் பார்க்குறா. அவகூட இன்னும் பல லீப்மேன்கள் சேர்ந்துகிறாங்க. அந்த மொட்டின் மீது பவுர்ணமி நிலவொளி பட்டாதான் காடு செழிப்பா இருக்கும். மேரி குறிப்பிட்ட இடத்துக்கு போகும் வழியில் காட்டை அழிக்குற போகன்ஸ் என்ற வில்லன்கள் குறுக்கே வராங்க. இவுங்க காடு எப்பவும் பாலைவனம் போலவே இருக்கணும்னு நினைக்கிறவங்க. அப்படி இருந்தாதான் கரையான் போல எல்லாத்தையும் அழிக்க முடியும்னு நினைக்கிறவங்க.

இவுங்களும் லேசுப்பட்டவங்க இல்ல. உயரமா பறந்து போக பறவை வாகனத்தை வைச்சிருதாங்க. லீப்மேன்கள் மாதிரி இவுங்ககிட்ட விஷ அம்பு இருக்கு. ஆயிரக்கணக்கான போகன்ஸ் ஒரே சமயத்தில் வேகமா படையெடுத்து வராங்க. அந்த அதிசயப் பூ மொட்ட நிலவொளியில் காட்டாமல் பறிக்க ஆவேசமா வராங்க. இவுங்கள தாண்டி மேரியும் மற்ற லீப்மேன்களும் அந்த பூ மொட்ட குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போனாங்களா, லீப்மேன்கள தேடும் மேரியின் அப்பா கண்ணில இவ பட்டாளா, மீண்டும் மேரி தன்னோட சுய உருவத்த அடைஞ்சாளான்னு தெரிஞ்சுக்க ஆசையா? Epic படத்தைப் பாருங்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்