வாண்டு பாண்டு: புதுசா ஓர் ஒட்டகச்சிவிங்கி!

By மிது கார்த்தி

வாண்டு: ஹாய் பாண்டு, என்னபா ரொம்ப வேகமா போய்ட்டு இருக்க?

பாண்டு: ஆமா வாண்டு, இன்னிக்கு எங்க கிளாஸ்ல எல்லோரும் விலங்குக் காட்சி சாலைக்குப் போறோம். கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதான் வேகமா போய்ட்டு இருக்கேன்.

வாண்டு: ஓ... விலங்குக் காட்சி சாலைக்குப் போறீங்களா? இன்னிக்குப் பூரா ஜாலிதான்.

பாண்டு: ஆமா வாண்டு, நிறைய புது விலங்குகள் வந்திருக்காம். அதையெல்லாம் பார்க்குறதுன்னா, ஒரே ஜாலிதானே?

வாண்டு: ஆமாமா, நீ புது விலங்குன்னு சொல்றப்ப எனக்கு தான்சானியா ஞாபகம்தான் வருது.

பாண்டு: ஆப்பிரிக்கக் கண்டத்துல இருக்குற தான்சானியா நாட்டைப் பத்தி சொல்றியா வாண்டு?

வாண்டு: ஆமா, அந்த நாட்டைப் பத்திதான் சொல்றேன். தான்சானியாவுக்கும் நாம பேசுற விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லையே?

வாண்டு: இருக்குபா, அதனாலத்தான் சொன்னேன். வழக்கமா ஒட்டகச்சிவிங்கி என்ன கலர்ல இருக்கும்?

பாண்டு: ம்... மஞ்சள் நிறத்துல இருக்கும். உடம்புப் பூரா திட்டுத்திட்டா இருக்கும்.

வாண்டு: கரெக்ட். ஆனா, தான்சானியாவுல புகழ்பெற்ற டாரான்கைர் தேசிய பூங்காவில் உள்ள ஒரு ஒட்டகச்சிவிங்கி வெள்ளை நிறத்துல இருக்கு.

பாண்டு: வெள்ளை நிறமா…? ரொம்ப ஆச்சரியமா இருக்கே. அந்த ஒட்டகச்சிவிங்கியைப் பத்தி வேறு தகவல் இருந்தா சொல்லேன்.

வாண்டு: அந்த ஒட்டகச்சிவிங்கி பிறந்து 15 மாசம் ஆகுதாம். பிறந்தப்பவே வெள்ளையாத்தான் இருந்துச்சாம். ஏதோ குறைபாடு, இல்லன்னா மரபணு பிரச்சினை காரணமா இப்படிப் பிறந்திருக்கலாம்னு பூங்காவுல நினைக்கிறாங்கா. அதனால அந்த ஒட்டகச்சிவிங்கி உயிரோட இருக்குறது கஷ்டம்ணும் கால்நடை மருத்துவர்கள் நினைச்சாங்களாம். ஆனா, பதினைந்து மாசம் ஆகியும் அதுக்கு ஒன்னும் ஆகலை. அது ஆரோக்கியமாவும் இருக்காம்.

பாண்டு: அப்போ அது விநோதமான ஒட்டகச்சிவிங்கின்னு சொல்லு.

வாண்டு: ஆமா, வெள்ளை நிறத்துல இருக்குறதால அரிய வகை ஒட்டகச்சிவிங்கியா மாறிடுச்சு. இந்த ஒட்டகச்சிவிங்கிய வேட்டைக்காரங்க கண்ணுல படாம, பூங்கா நிர்வாகத்துல ரொம்ப கவனமா பார்த்துக்குறாங்களாம்.

பாண்டு: நான் விலங்குக் காட்சிக்கு போறப்ப என் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இந்த ஒட்டகச்சிவிங்கியைப் பத்தி சொல்றேன்.

வாண்டு: ம்... சரி பாண்டு.

பாண்டு: என்கிட்டகூட ஒரு வெளிநாட்டு குட்டிப் பையனைப் பத்தி ஒரு செய்தி இருக்கு வாண்டு.

வாண்டு: அப்படியா? அது என்ன செய்தி?

பாண்டு: நேபாளத்துல 10 வயசு குட்டிப் பையன் சினிமா டைரக்டரா இருக்குறது உனக்குத் தெரியுமா?

வாண்டு: தெரியாதே? நீயே அதைப் பத்தி சொல்லேன்.

பாண்டு: சரி…சரி… சொல்றேன். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுல சவுகத் பிஸ்தான்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அங்க இருக்குற ஒரு ஸ்கூல்ல இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறானாம். இந்தக் குட்டிப் பையன் ரெண்டு வருஷத்துக்கு முன்னால ‘லவ் யூ பாபா’ன்னு ஒரு படத்தை டைரக்ட் பண்ணியிருக்கான்.

அப்போ அவனுக்கு எட்டு வயசுதான். இதுக்கு முன்னால நம்ம நாட்டைச் சேர்ந்த கிஷன் ஸ்ரீகாந்த்ன்னு 9 வயசு பையன் 2006-ல ‘ஃபுட்பாத்’ன்னு ஒரு படத்தை டைரக்ட் பண்ணான். அதை சவுகத் பிஸ்தா முறியடிச்சான். உலகின் குட்டி டைரக்டர்னு கின்னஸ் சாதனை புத்தகத்துலையும் சவுகத்துக்கு இடம் கிடைச்சது.

வாண்டு: ஓ... ரொம்ப சமத்தான குட்டிப் பையன்தான் போலிருக்கு. இது ரெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்துதானே. இப்போ என்ன செய்றான்?

பாண்டு: இப்போவும் படிச்சுகிட்டுதான் இருக்கான். இந்தப் படம் நேபாளத்துல மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடுச்சாம். இப்போ அந்தக் குட்டிப் பையனோட படம் பல நாடுகள்லையும் ரிலீஸ் பண்ணிகிட்டு வராங்க. எல்லா நாட்டுலையும் அந்தப் படம் நல்லா ஓடுதாம்.

வாண்டு: ஓ… உலக அளவுல சவுகத் பெரிய ஆளாயிட்டான்னு சொல்லு. சரி பாண்டு, பேசிட்டு வந்ததுல ஸ்கூல் வந்ததே தெரியலை. விலங்குக் காட்சி சாலைக்குப் போய்ட்டு வந்த பிறகு, சாயங்காலம் வீட்டுல பார்ப்போம்.

பாண்டு: சரி வாண்டு, டாட்டா...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்