வாண்டு: பாண்டு குட்மார்னிங். என்ன ஆளைப் பார்க்கவே முடியலை. ரொம்ப பிஸியா இருக்க போல?
பாண்டு: அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே. வழக்கம் போலத்தான் இருக்கேன்.
வாண்டு: நேத்து உங்க வீட்டுக்கு வந்தேனே. ஆனா, நீ வீட்டுல இல்ல. எங்கப் போயிருந்த பாண்டு?
பாண்டு: ஓ... அதுவா தட்பவெப்பநிலை, காலநிலையைப் பத்தி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்துச்சு. அதைப் பத்தி சில சந்தேகங்களைக் கேட்க டீச்சர் வீட்டுக்குப் போயிருந்தேன்.
வாண்டு: சென்னை, கடலூர்ல மழையும் வெள்ளமும் வந்ததால, அதைப் பத்தி ஏதாவது கட்டுரை எழுதவா பாண்டு?
பாண்டு: இல்லை. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பர் 27-ம் தேதி தொடங்குதுல்ல. அதுல இந்தத் தலைப்புல நான் சின்னதா பண்ண ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்கப் போறேன். அது பத்தி ஆலோசிக்கத்தான், என் டீம் ஃபிரெண்ட்ஸோட டீச்சர் வீட்டுக்குப் போயிருந்தேன்.
வாண்டு: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடா...? இதைப் பத்தி நீ எனக்கு எதுவும் சொல்லலியே.
பாண்டு: ஆமால்ல, என் தம்பிகூட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுன்னா என்னான்னு கேட்டுக்கிட்டே இருந்தான். ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதக் கடைசில இந்தியாவுல ஏதாவது ஒரு நகரத்துல இந்த மாநாடு நடக்குது. இந்த முறை பஞ்சாப்புல மொகாலியில இந்த மாநாடு நடக்குது.1993-ம் வருஷத்துலதான் இந்த மாநாடு முதல் முறையா நடந்துச்சு. அப்போதிருந்து தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு.
வாண்டு: சரி, எதுக்காக இந்த மாநாடு நடத்துறாங்க? யாரெல்லாம் கலந்துக்க முடியும்?
பாண்டு: மாநாட்டுல 10 - 17 வயசுக்குள்ள இருக்குற சிறுவர், சிறுமிகள் கலந்துகொள்ள முடியும் வாண்டு. இதுல கலந்துக்க வயசு மட்டும்தான் ஒரே தகுதி. படிப்பைப் பாதியில் விட்ட சிறுவர், சிறுமிகள்கூட கலந்துக்க முடியும். சின்ன வயசிலேயே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும், அவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதுற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்துறாங்க.
வாண்டு: ஓ.... ரொம்ப நல்ல விஷயமா இருக்கே... சரி, இந்த மாநாட்டுல நான் கலந்துக்க முடியுமா?
பாண்டு: உடனே முடியாது வாண்டு. மாநாட்டுல கலந்துக்குறத்துக்கு முன்னாடி மாவட்ட அளவுல மாநாடு நடக்கும். அதுல நம்மளோட ஆய்வுக் கட்டுரையை குழுவா சமர்பிக்கணும். அதுல தேர்வானா மாநில அளவுல நடக்குற மாநாட்டுல கலந்துக்க முடியும். அங்கேயும் தேர்வானாத்தான் தேசிய அளவுல கலந்துக்க முடியும். அதுக்கு இப்போ டைம் இல்லியே. நீ அடுத்த வருஷம் முயற்சி செஞ்சா, நிச்சயம் கலந்துக்கலாம்.
வாண்டு: ஓ... அப்படியா, இதை மனசுல வச்சுக்கறேன். அடுத்த வருஷம் நானும் கலந்துப்பேடன். நம்ம பிரெண்ட்ஸ்களுக்கும் சொல்றேன்.
பாண்டு: நல்லது வாண்டு.
வாண்டு: அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா, பாண்டு?
பாண்டு: என்ன விஷயம்? எதுவும் சொல்லாமலேயே கேட்டா, எனக்கு எப்படித் தெரியும்?
வாண்டு: அதுவும் சரிதான். டெல்லியில காற்று மாசு அடைஞ்சதால கார் ஓட்ட நிறைய கட்டுப்பாடு விதிச்சுருக்காங்க இல்ல.
பாண்டு: ஆமா, இப்போ அதுக்கென்ன?
வாண்டு: கார் ஓட்ட நிறையக் கட்டுப்பாடு வந்துட்டதால, நிறைய பேரு கார் ஓட்ட முடியாம தவிக்குறாங்களாம். அதுக்கு நம்மள மாதிரி ஒரு குட்டிப் பையன் தீர்வு சொல்லியிருக்கான் பாண்டு.
பாண்டு: அப்படியா…? அப்படி என்ன தீர்வு சொன்னான், அந்தப் பையன்? அதை முதல்ல சொல்லுபா.
வாண்டு: சொல்றேன் வாண்டு. டெல்லியில வாரத்துல முதல் மூன்று நாட்கள் ஒற்றை இலக்கப் பதிவு எண் கொண்ட காரும், அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்கப் பதிவு எண் கொண்ட காரைப் பயன்படுத்தலாம்னு சொல்லிட்டாங்க. ஒற்றை இலக்கப் பதிவு எண் கொண்ட கார் போறப்ப இரட்டை இலக்கப் பதிவு எண் கொண்ட கார் வீட்டுலேயே இருக்கும். அதனால முதல் மூணு நாளுக்கு கார் இல்லாமத்தான் போகணும்.
பாண்டு: அதெல்லாம் புரியுது வாண்டு. அந்தப் பையன் அதற்கு தீர்வு சொல்லியிருக்கறதா சொன்னியே, அது என்ன தீர்வு?
வாண்டு: சொல்றேன், அவசரப்படாதே. இதுக்காக அந்தப் பையன் ஒரு இணையதளத்தைத் தொடங்கியிருக்கான். அவனோட பேரு அக்ஷத் மிட்டல். 13 வயசுதான் ஆகுது அவனுக்கு. அந்த இணையதளத்துல ஒருவர், தான் எங்கு போகணும்னும் பதிவு செய்யணுமாம். ஒற்றை இலக்கப் பதிவு கார் வைச்சுருக்கவரு ஒரு இடத்துக்குப் போறாருண்ணா, அதே இடத்துக்கு போகலாம்னு நினைக்குற இரட்டை இலக்கப் பதிவு கார்காரரும் இதில் ஏறிப் போகலாம். ஒரு முறை போகவோ அல்லது திரும்ப வரவும்கூட பயன்படுத்திக்க முடியுமாம். வயசு, ஆணா, பெண்ணா, போற பாதையைச் சரியாக சொன்னா, அதுக்கு தகுந்த மாதிரி பயணம் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கான் அந்தப் பையன்.
பாண்டு: ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்கானே. டெல்லியில மட்டுமா காற்று மாசுபட்டிருக்கு. எல்லா இடத்திலேயும்தான். எல்லா இடத்திலும் இந்த முறையைக் கொண்டு வந்தா கொஞ்சமாவது காத்து சுத்தமாகும் இல்லையா வாண்டு?
வாண்டு: நிச்சயமா. இந்த முறையை எதிர்காலத்துல எல்லா இடத்திலும் கொண்டு வருவாங்கண்ணு நாம நம்புவோம். சரி பாண்டு, மாநாட்டுல நல்லபடியா கலந்துகிட்டு ஜெய்ச்சிட்டு வா.
பாண்டு: ம்... நிச்சயமா வாண்டு. அப்போ நான் வரேன்.
வாண்டு: பை...பை...
அக்ஷத் மிட்டல்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago