வில்லில் அம்பை எய்து விளையாடும் வில் வித்தையை டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். உங்களிடம் விளையாட வில்லும் அம்பும் இருந்தால், அதைப் போலவே விளையாடி மகிழ்வீர்கள் இல்லையா? வில், அம்பை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்வோமா?
என்னென்ன தேவை?
ஐஸ்கிரீம் குச்சி, ரப்பர் பேண்ட், பட்ஸ் / பல்குத்தி, பசை, கத்தரிக்கோல், காகித கட்டர், வண்ணக் காகிதம்
எப்படிச் செய்வது?
l ஐஸ்கிரீம் குச்சியை எடுத்து லேசாக வளைத்துக்கொள்ளுங்கள்.
l குச்சியின் இரு முனைகளிலும் கத்தியைக்கொண்டு லேசாக வெட்டிக்கொள்ளுங்கள்.
l ரப்பர் பேண்டை வெட்டிய முனையில் விட்டு, அந்த முனையில் இருந்து இன்னொரு முனைக்கு ரப்பரைப் பொருத்திக்கொள்ளுங்கள். வில் தயாராகிவிட்டது.
l இப்போது அம்பு வேண்டுமில்லையா? பட்ஸ் அல்லது பல்குத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு அம்பு போல் செய்யச் சிறிய துண்டுக் காகிதத்தை எடுத்து முக்கோண வடிவில் வெட்டுங்கள். அதை பட்ஸின் முனையில் ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது அம்பும் தயாராகிவிட்டது.
இப்போது இந்த வில்லையும் அம்பையும் வைத்து ஜாலியாக விளையாடி மகிழுங்கள். அதேநேரம், கண்ணைக் குத்திவிடும் வகையிலோ, தாக்கும் வகையிலோ விளையாட வேண்டாம்.
படங்கள்: மோ.வினுப்பிரியா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago