பட்டாம்பூச்சி என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்லையா? வீட்டுச் சுவரில் காகிதப் பட்டாம்பூச்சிகளை ஒட்டவைத்து அழகு பார்ப்பீர்கள். இதோ காகிதத்தில் நாமே பட்டாம்பூச்சி செய்து பார்ப்போம்.
என்னென்ன தேவை:
ஏதாவது ஒரு வண்ணக் காகிதம்.
எப்படிச் செய்வது?
# ஏதோ ஒரு வண்ணக் காகிதத்தைச் சதுர வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முக்கோண வடிவில் அதை மடித்துக்கொள்ளுங்கள். பின்னர் அதைத் திறந்து காகிதத்தைப் பாதியாக மடியுங்கள்.
# படத்தில் காட்டியதைப் போல விரலால் காகிதத்தின் இருபுறமும் மடித்த பகுதியைக் கீழே தள்ளுங்கள். இப்போது உங்களுக்கு முக்கோண வடிவம் கிடைத்துவிட்டதா?
# இப்போது மீண்டும் அதை முக்கோண வடிவில் மடியுங்கள். முக்கோணத்தின் திறந்த முனையைச் சிறிதாக வெட்டி முக்கோணத்தைத் திறக்கவும்.
# படத்தில் காட்டியதுபோல காகிதத்தின் இரு பக்கங்களையும் மடியுங்கள்.
# இப்போது காகிதத்தின் பின்புறத்தை வளைத்து அதை முன் பக்கமாகக் கொண்டு வாருங்கள்.
இப்போது அழகான காகிதப் பட்டாம்பூச்சி கிடைத்துவிட்டதா? உங்கள் வீட்டுச் சுவர்களில் அதை ஒட்டி அழகுப்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago