ஜெர்மன் ஷெப்பர்டு நாய் பார்த்திருக்கீங்களா? திருடன்களைக் கண்டுபிடிக்க போலீஸ் வச்சிருக்கிற நாய் வகைல இது முக்கியமானது. அது என்ன வகைன்னு கேட்கிறீங்களா? நாய்கள்ள பல வகை உண்டு. நாம தெருவுல பார்க்குற நாய்கள் இல்லாம ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மென், பொமெரேனியன், புல்டாக் அப்படின்னு நிறைய வகை இருக்கு. ஹச் டாக் சொல்றோம்ல அந்த நாயோட உண்மையான பேரு பியூக்.
அது சரி, உங்களுக்கு நாய்க் குட்டின்னா ரொம்பப் பிடிக்குமா? வீட்ல அப்பா, அம்மாகிட்ட நாய்க் குட்டி வேணும்னு கேட்டு அடம்பிடிச்சிருக்கீங்களா? நாய் வளர்க்கிறது ஈஸி இல்லை. ஒரு குழந்தையை வளர்க்கிற மாதிரி அது. உங்கள மாதிரியே ‘Bolt’ படத்துல வர்ற பென்னிங்கிற குட்டிப் பாப்பாவும் நாய்க் குட்டி வளர்க்க ஆசைப்பட்டாள். அதுக்காக ஒரு நாய்க் குட்டி வாங்கி, அதுக்கு Bolt ன்னு பேரு வைச்சு வளர்க்கிறாள். அது ஒரு அமெரிக்கன் ஷெப்பர்டு நாய்க் குட்டி.
ஐஞ்சு வருஷம் கழிச்சு நாய்க் குட்டி பெருசா ஆயிடுது. அப்போ இந்த நாய்க் குட்டியும் அவளும் சேர்ந்து டிவி சீரியல் ஒண்ணுல நடிக்கிறாங்க. இந்த டிவி சீரியல் பயங்கர ஹிட் ஆயிடுது. அந்த சீரியல்படி அந்த நாய் ஒரு சூப்பர்மேன். அது லேசா உருமினாலேயே பெரிய பெரிய கட்டிடமெல்லாம் உடைஞ்சு சுக்கு நூறாப்போயிடும்.
கதையில பென்னியோட அப்பாவைக் கடத்திட்டுப் போயிடுவாங்க. அவரைக் காப்பாத்துறதுக்காக பென்னியும் போல்ட்டும் போறாங்க. அவுங்கள தாக்க வர்றவங்கள போல்ட் தன் சூப்பர் பவரால அடிச்சு நொறுக்குது. அவுங்களப் பிடிக்க ஃப்ளைட்ல எதிரிங்க வர்றாங்க. ஆனால் போல்ட் ஃப்ளைட்ட விட வேகமா பென்னியையும் இழுத்துட்டுப் பாய்ஞ்சு ஓடுது. கடைசியில எதிரிங்க பெரிய படையோடு சுத்தி வளைக்கவும் பென்னியும் போல்ட்டும் நடுவுல மாட்டிக்கிறாங்க.
போல்ட் அவுங்களப் பார்த்து ஒரு உறுமு உறுமுது. அவ்ளோதான் அவுங்க எல்லாம் தரை மட்டமாயிடுறாங்க. ஆனால் இது எதுவும் உண்மை இல்ல. நிஜத்தில் போல்ட்க்கு எந்த சூப்பர் பவரும் கிடையாதுங்கிறதுதான் உண்மை. ஆனால் போல்ட் தனக்கு உண்மையிலேயே சூப்பர் பவர் இருக்குன்னு நம்புது.
எப்பவும் ஹீரோவே ஜெயிச்சுட்டு இருந்தால் போரடிக்கும்ல. அந்த சீரியலை எடுக்கிறவங்க ஒரு முறை போல்ட் தோற்பது மாதிரி படம் பிடிக்கிறாங்க. அதன்படி போல்ட் முன்னாடி பென்னியைக் கடத்திட்டுப் போயிடுறாங்க. போல்ட்டுக்கு தன் எஜமானரான பென்னியைக் காப்பாத்த முடியலைன்னு ஆத்திரம். போல்ட்டையும் பிடிச்சிட்டுப் போய் தனியா அடைச்சு வச்சுர்றாங்க.
எப்படியாவது பென்னியைக் காப்பத்தணும்னு நெனச்சு போல்ட் தப்பிச்சு வந்து, அவளைத் தேடி அலையுது. அப்படித் தேடும்போது டி.வி. கம்பனியில இருக்கிற ஒரு பெட்டியில தவறுதலா விழுந்திடுது. அந்தப் பெட்டிய லாரியில ஏத்தி நியூயார்க் அப்படிங்கிற ஒரு பெரிய ஊருக்குக் கொண்டுபோயிடுறாங்க. அங்க அந்தப் பெட்டியில இருந்து தப்பிக்கிற போல்ட் வேகமாக ஓடுது. டி.வி.யில பண்ண மாதிரி சூப்பர் பவரை வரவைக்கப் பாக்குது.
ஆனால் டி.வி.யில உடைச்சுப் போடுற கம்பியை நிஜத்துல உடைக்க முடியாமல் மோதி விழுகுது. பள்ளத்தைத் தாண்ட முடியாமல் உள்ள விழுந்து அடிபடுது. டி.வி.யில கம்பியெல்லாம் வளைச்சுத் தப்பிக்கும் போல்ட் கம்பிக்குள்ள போக முடியாம தலை சிக்கிகுது.
எப்படியாவது பென்னியைக் காப்பத்தணும்னு நெனச்சு போல்ட் தப்பிச்சு வந்து, அவளைத் தேடி அலையுது. அப்படித் தேடும்போது டி.வி. கம்பனியில இருக்கிற ஒரு பெட்டியில தவறுதலா விழுந்திடுது. அந்தப் பெட்டிய லாரியில ஏத்தி நியூயார்க் அப்படிங்கிற ஒரு பெரிய ஊருக்குக் கொண்டுபோயிடுறாங்க. அங்க அந்தப் பெட்டியில இருந்து தப்பிக்கிற போல்ட் வேகமாக ஓடுது. டி.வி.யில பண்ண மாதிரி சூப்பர் பவரை வரவைக்கப் பாக்குது.
ஆனால் டி.வி.யில உடைச்சுப் போடுற கம்பியை நிஜத்துல உடைக்க முடியாமல் மோதி விழுகுது. பள்ளத்தைத் தாண்ட முடியாமல் உள்ள விழுந்து அடிபடுது. டி.வி.யில கம்பியெல்லாம் வளைச்சுத் தப்பிக்கும் போல்ட் கம்பிக்குள்ள போக முடியாம தலை சிக்கிகுது.
அப்புறம் ஒரு புறா மூலமா அந்தக் கம்பில இருந்து தப்பிக்குது. போல்ட் வெளியுலகமே தெரியாமல் முழிக்குது. பென்னிய கடத்தி வச்சிக்கிற இடம் மிட்டன்ங்கிற பூனைக்குத் தெரியும்னு புறா சொல்ல, அத நம்பி அந்தப் பூனையைப் பிடிச்சு டி.வி.யில வர்ற மாதிரி மிரட்டுது. பூனைக்கு எதுவும் தெரியாவிட்டாலும் உயிருக்கு பயந்து சொல்றேன்னு சொல்லுது. அந்தப் பூனையும் போல்ட்டும் சேர்ந்து பென்னியைத் தேடுறாங்க.
அவுங்க பென்னிய கண்டு பிடிச்சாங்களா? தான் சூப்பர்மேன் இல்ல, ஒரு சாதாரண ஆள்தான்னு போல்ட்டுக்குத் தெரிஞ்சதா? படம் பாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago