வாண்டு பாண்டு: ஜொலிக்கும் ஒளியின் பலே ரகசியம்!

By மிது கார்த்தி

பாண்டு: ஹலோ வாண்டு, என்ன காலையில இருந்து ஆளையே காணோம். எங்க போயிருந்த?

வாண்டு: தீபாவளிக்குப் புது துணி எடுக்க அம்மாவோட கடைக்குப் போயிருந்தேன் பாண்டு.

பாண்டு: ஓ... துணி எடுத்தாச்சா? எனக்கும் எடுத்தாச்சு.

வாண்டு: அப்போ ஜாலிதான்.

பாண்டு: ஆமாமா, என்னென்ன வெடி வாங்கலாம்னுகூட நானும் என் தம்பியும் லிஸ்ட் போட்டு வைச்சுட்டோம். நீ என்னென்ன வாங்கப் போற?

வாண்டு: வெடி வெடிக்கிறதுன்னா எனக்கு அலர்ஜின்னு உனக்குத் தெரியாதா பாண்டு?

பாண்டு: தெரியுமே. வெடியைப் பத்தி இன்னிக்கு காலையில, என் தம்பி என்கிட்ட நிறைய கேள்வி கேட்டு திணறடிச்சிட்டான்.

வாண்டு: அப்படி என்ன கேட்டான் அவன்?

பாண்டு: மத்தாப்பு எப்படி கலர் கலரா எரியுதுன்னு கேட்டான்? தெரியலைடான்னு சொன்னாலும் விடலை? கேட்டுக்கிட்டே இருந்தான். உனக்குத் தெரியுமா வாண்டு?

வாண்டு: கொஞ்சமா தெரியும்? எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லட்டுமா?

பாண்டு: சொல்லு... சொல்லு... இதை நான் அப்படியே, என் தம்பிக்கிட்டே சொல்லிடுறேன்.

வாண்டு: பட்டாசு செய்யுற தொழில்நுட்பத்தோடபேரு ‘பைரோடெக்னிக்ஸ்’. இந்த தொழில்நுட்பத்தை வைச்சுதான் எல்லா பட்டாசுகளையும் செய்யுறாங்க.

பாண்டு: அப்படியா வாண்டு.

வாண்டு: ஆமா பாண்டு, மத்தாப்புன்ற பேரே உருது சொல்லில் இருந்துதான் வந்துச்சுசாம். ‘மஹதாப்’ன்னு உருதுல சொல்லுவாங்களாம். அப்படின்னா ‘பிரகாசமான ஒளி’ன்னு அர்த்தமாம். இந்த சொல்லுதான் ‘மத்தாப்பு’ன்னு மாறிடுச்சு.

பாண்டு: ஓ... இப்படித்தான் அந்தப் பேரு வந்துச்சுசா? கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அப்படியே மத்தாப்பு கலர் கலரா எப்படி எரியுதுன்னு சொல்லிடேன்.

வாண்டு: சொல்றேன் பாண்டு. சொல்லலைன்னா என்ன நீ விட்டுடுவியா என்ன?

பாண்டு: புரிஞ்சா சரி.

வாண்டு: மத்தப்புகள்ல எவ்ளோ உலோகங்கள், ரசாயனங்களைச் சேர்க்கிறாங்களோ அதுக்கு தகுந்த மாதிரி கலர் கலரா எரியும்.

பாண்டு: என்னென்ன சேர்ப்பாங்க?

வாண்டு: நிறைய இருக்கு பாண்டு. அலுமினியம், மக்னீசியம், மக்னாலியம் (அலோகம்) பொருட்கள் வெள்ளை கலர்ல பொறிகளை உருவாக்கும். குண்டு பல்பு எரியுமில்லையா அந்த கலர்ல எரியும். கம்பி மத்தாப்பை இதுலதான் செய்யுறாங்க. தீப்பெட்டி மத்தாப்புகள் பச்சை, சிவப்பு, மஞ்சள்னு பல கலர்ல எரியுமில்லையா?

பாண்டு: ஆமாமா.

வாண்டு: அதுக்குன்னு சில உலோகங்கள் இருக்கு. பேரியம் கலந்தா பச்சை கலர்ல மத்தாப்பு எரியும். ஸ்ட்ரான்சியம் கலந்தா சிவப்பு கலர்ல்ல எரியும்.

பாண்டு: அம்மாடி மத்தாப்புகள்ல இவ்ளோ விஷயம் இருக்கா?

வாண்டு: இன்னும் இருக்கு வாண்டு. ஒவ்வொரு வெடியும் இப்படித்தான் செய்றாங்க.

பாண்டு: இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் வாண்டு?

வாண்டு: போன வாரம் எங்க டீச்சர் இதைப் பத்தி சொன்னாங்க. இதை நீ, உன் தம்பிகிட்டே சொல்லு.

பாண்டு: நிச்சயமா சொல்றேன். இல்லைன்ன திரும்பவும் கேட்டுக்கிட்டே இருப்பான்.

வாண்டு: பாண்டு, வரவர நீ நம்மள மாதிரி குட்டிப் பசங்களைப் பத்தின சேதிகள் எதுவுமே சொல்றதில்லையே, ஏன்?

பாண்டு: அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை வாண்டு. இப்போகூட ஒரு சேதி கையில இருக்கே.

வாண்டு: என்ன சேதி, சட்டுப்புட்டுன்னு சொல்லு. நான் டியூசனுக்குப் போகணும்.

பாண்டு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்னு கேள்விப்பட்டிருக்கியா?

வாண்டு: தெரியுமே... அங்க என்ன செய்தி?

பாண்டு: அந்த அமைப்பு ரெண்டு வாரத்துக்கு முன்னால உலக மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடினாங்க. அப்போ சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை சைதன்யான்ற குட்டிப் பொண்ணுக்குக் கொடுத்திருக்காங்க. சைதன்யா 6-ம் வகுப்புதான் படிக்கிறாங்க. ஆனா, இப்பவே தமிழல்ல வர்ற கதைகளை இங்கிலீஷ்ல மொழி பெயர்த்து எழுதுறாங்க.

வாண்டு: ம்... ரொம்ப கெட்டிக்காரி பெண்ணா இருப்பா போல?

பாண்டு: ஆமாமா, 3-ம் வகுப்பு படிக்கிறப்பவே அந்தக் குட்டிப் பொண்ணு மொழிபெயர்க்க ஆரம்பிச்சுடுச்சாம். தமிழ், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம்னு பல மொழிகள் சைதன்யாவுக்குத் தெரியுமாம். அதான் மொழிபெயர்ப்பையும் ரொம்ப ஈஸியா செய்யுறாபா.

வாண்டு: ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயத்தைதான் சொல்லியிருக்கே. சரி பாண்டு, அப்போ நான் வரேன்.

பாண்டு: சரி வாண்டு, பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்